பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 565 அரும் தவப்பயனால் அடைந்தாற்கு அறைந்து இருந்தவத்து இரையோற்கு இது இயம்பினான் ಶ್ಗ வேத விதிமுறை விண்ணுளோர் தய்வ நீள் புனல் ஆபுதிருத்திட ஐயன் ஆணையினால் இளம் கோளரி கையினால் மகுடங்கவித்தான், அரோ !” வீடணன் அரியணையில் அமர்ந்து பின்னர் இராமனை வணங்க, இராமன் வீடணனை வாழ்த்துகிறான். “உரிமை முவுலகும் தொழ உம்பர்தம் பெருமை நீதி அறன் வழிப்பேர் கில இருமையே அரசு ...' தருமசீல என்றான் மறைதந்துளான்” "பன்னு நீதிகள் பற்பல கூறி மற்று உன்னுடைத்தவ ரோடு உயர் கீர்த்தி யோய் மன்னி வாழ்” கென்று கூறி இராமன் வீடணனை வாழ்த்தினான். இவ்வாறு இலங்கையில் இராவணனுடைய தனியாண்மை ஆட்சி முடிந்து இராமனுடைய பேரரசுடன் இணைந்த சக வாழ்வுடன் கூடிய வீடணனுடைய ஆட்சி அமைகிறது. அறன் வழி பிறளாத ஆட்சியாக வீடணன் தனது ஆட்சியை அமைத்து தரும சீலனாக வாழ இராமன் வாழ்த்தியதைக் கம்பன் மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார். வீடணன் இலங்கையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், இராமன் சீதையுடனும் மற்றும் இலக்குவன், சுக்கிரீவன் அங்கதன், வீடணன் ஆகியோருடனும் சேர்ந்து விமானத்தில் நந்திக் கிராமத்தை அடைந்தனர். ஏற்கனவே இராமனும் சீதையும் வரும் செய்தியை அனுமன் முன் கூட்டியே சென்று பரதனிடம் கூறி, பரதனும் இராமனை வரவேற்கத் தயாராகி அனைவரையும் வரவேற்று நந்திக் கிராமத்தில் சகோதரர்கள் ஒன்று சேர்ந்தார்கள். இராமனும் பரதனும் இலக்குவனும், சத்துருக்கனனும் தங்களுடைய தவ