பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. æinugglin •!!!!!usy! 567 மகிழ்ச்சியாக ஆட்சி நடத்தின எனக் கம்பன் குறிப்பிடுகிறார். “விரத நூல் முனிவன் சொன்ன விதிமுறை வழாமை நோக்கி வரதனும், இளைஞர்க்கு ஆங்கண் மாமணி மகுடம் சூட்டி பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து நாளும் கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ !” என்றுNகம்பன், இராமனும் அவனது சகோதரர்களும் இணைந்து சேர்ந்து) கூட்டாக வசிட்ட முனிவன் வழி காட்ட ஆட்சி முறையை வழுவில்லாமல் நன்கு நடத்தியதாகக் கூறுகிறார். நன்னூல் முறை செயும் அரசர் என்பது கம்பனது அரசியல் கருத்துக்களை அயோத்தி, கிட்கிந்தை, இலங்கை ஆகிய அரசுகளில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள் போர்க்கால அரசியல் நிகழ்ச்சிகள் பற்றிக் கம்பன் மிக நுட்பமாக எடுத்துக் கூறியுள்ள விவரங்களில் காண்கிறோம். இராம ராஜ்யம் என்னும் கருத்தமைவில் பரதனுடைய நந்திக் கிராம ஆட்சி, குகனுடைய கங்கைக்கரை ஆட்சி, சுக்கிரீவனுடைய கிட்கிந்தை ஆட்சி, வீடணனுடை இலங்கை ஆட்சி ஆகியவைகளும் சேரும். இந்த ஆட்சிகள் எல்லாம், தூய்மையான, அறவழியிலான நன்னூல் முறையிலான ஆட்சிகளாகும். பாரத நாட்டின் நீண்ட வரலாற்றில் நமது பண்பாட்டில் தோன்றியுள்ள, வளர்ச்சி பெற்றுள்ள, அரசியல் நீதிகள், நெறி முறைகள், தொன்று தொட்டு வந்துள்ள நமது சாத்திரங்கள் பல வற்றிலும் எடுத்துக் காட்டியுள்ள அரச நீதிகள் வழியில் நடைபெறும் ஆட்சி முறைகளாகும். கம்பனுடைய இராமாவதாரக் காவியத்தில் வசிட்டன், பரதன், இராமன், இலக்குவன், வீடணன், அனுமன் முதலியோர் ஆங்காங்கு உரிய இடங்களில் கூறியுள்ள கருத்துக்களில் அரசியல் நெறிகள், நீதி நெறிகள், ஒழுக்க நெறிகள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அவைகளைத் தொகுத்துக் கம்பனுடைய சீரிய அரசியல் கருத்துக்களாகவும் சமுதாயக் கருத்துக்களாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.