பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusй7 – 905 ~Qрғылшй шптіъюви — Р), «Rofkитеosйі 568 பரதனுடைய எளிமையும் நேர்மையும் அனுமனுடைய அடக்கமும் சொல் திறனும் வீடணனுடைய அறநெறியும் அறிவு கூர்மையும், இலக்குவனுடைய வேகமும், தியாகமும், இராமனுடைய அருங் குணங்களும் அருளும் ஆகிய அனைத்தும் இராம ராஜ்யத்தின் சின்னங்களாகும். கம்பனுடைய அரசியல் மற்றும் சமுதாய சிந்தனைகளில் சிறப்பு மிக்கவைகளை நேரடியாகப் பால காண்டத்தில் காண்கிறோம். அதில் கம்பனுடைய, காலத்தை வென்ற எந்நாளும் நிலைத்து நிற்கக் கூடிய உயர்ந்த சிந்தனைகளைக் காண முடிகிறது. கோசல நாட்டின் சிறப்புகளை பற்றிய கம்பனுடைய கவிதைகள் மிகவும் உயர்ந்த சிந்தனை வளமும் இலக்கிய வளமும் அமைந்ததாக உள்ளன. அவைகள் மிக மேலான சமுதாயக் கருத்துக்களாகவும் அரசியல் கருத்துக்களாகவும் அமைந்துள்ளன. கம்பன் கோசல நாட்டின் ஆற்றுச் சிறப்பைப் பற்றிக் கூறுகிறார். சரயு நதியின் வளத்தைப் பற்றிக் கூறுகிறார். கம்பனுக்கு சரயு நதியைக் காட்டிலும் காவிரியையும் பெண்ணையாற்றையும் பற்றி அதிகம் தெரியும். தான் அறிந்தத் தெய்வத்திரு நதிகளை நினைவில் கொண்டு சரயு நதியின் சிறப்பைப் பற்றிப் பாடுகிறார். ஒரு நாட்டின் வளத்திற்கு ஆற்றுவளம் அடிப்படையானது. “கல் இடைப் பிறந்து போந்து கடல் இடைக் கலந்த நீத்தம் எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருள் ஈது என்னத் தொல்லையில் ஒன்றேயாகித் துறை தொறும் பரந்த சூழ்ச்சிப் பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே!” எல்லையில்லாத பொருள் செரிந்த அறிவுச் செல்வம் நிறைந்த கருத்துக்களை எடுத்துக் கூறும், ஏராளமான உயர்ந்த நீதிநெறிகளை விளக்கிக் கூறும் வேதங்களும், சாத்திரங்களும் பல வேறு சமயங்களும் போல அளவற்ற செல்வத்தை நதியாக இந்த ஆறு