பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை-அ.-சீனிவாசன் | 1.4 மற்றவன் மனைவியைச் சிறையில் அடைத்துள்ளோம். நாம் மான அவமானம் பற்றிப் பேசுகிறோம். ஆனால் காமத்தைப் பேஜ்கிறோம். மறுபக்கம் மானுடரைக் கண்டு கூசுகிறோம்” என்று கும்பகருணன் இருபக்கமும் இடித்துக் கூறுகிறான் மேலும், “வென்றிடுவர் மானுடவர் ஏனும் அவர்தம்மேல் நின்றிடை விடாது நெறி சென்று உற நெருக்கித் தின்றி டுதல் செய்கிலம் எனில் செறுநரோடும் ஒன்றிடுவர் தேவர் உலகேழும் உடன் ஒன்றாம்” என்றும் கூறி, கடைசியில், “ஊறு படை யூறுவதன் முன்னமொரு நாளே ஏறு கடல் ஏறிநரர் வானரரை யெல்லாம் வேறு பெயராத வகை வேரொடு மடங்க நூறுவதுவே கருமம், என்பது நுவன் றான்.” என்று முடிவான கருத்துக் கூறி முடிக்கிறான் கும்பகருணன் ஒரு அபூர்வமான பிறப்பு. மிகச்சிறந்த பலவான். வல்லமையிலும், ஆற்றலிலும் இராவணனுக்கடுத்தவன். ஆயினும் ஆண்டில் பாதிநாள் உறக்கத்தில் இருப்பான். நன்றாகத் துங்கி எழுந்து விட்டால் அவனை வெல்வதற்கு யாராலும் முடியாது. சிறந்த நீதிவான். எல்லா அறங்களும் அறிந்தவன். அண்ணன் செய்த தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறான். ஆயினும் போரில் மானுடரை நூறுவதே கருமம் என்று முடிக்கிறான். }கிம்பகருணனுடைய குண இயல்புகளைப் பற்றி வீடணன் வாயிலாக வேறு இடத்தில் காண்போம். எனினும் மானுடன் பற்றிய மதிப்பீட்டில் கும்பகருணனும் இதர அரக்கர் தலைவர்களின் கருத்தை யொட்டியே பேசியிருக்கிறான் என்பதைக் காண்கிறோம். இராவணனுடைய தலைமகன் வல்லமைமிக்க மாவீரன் இந்திரசித்தன் வீரத்துடன் தன் கருத்தில் மானுடரை இழித்துப் பேசுகிறான்.