பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. şıbug)]ib மானுடமும் | 15 “வல்லே சென்று படையோடு சிறு மானுடர் சினப் போர் வென்று பெயர்வாய் அரச; நீ கொல்; எனவீரம் நன்று பெரியது” என்று மகன் நகைத்து இவை புகல்.” “குரங்குபட மேதினி குறைத் தலை நடப்போர் அரங்குபட, மானுடர் அலந்து அலை படப்பார் இரங்கு படர் சீதைபட, இன்றிருவர் நின்றார் சிரம் குவடு எனக் கொணர்தல் காணுதி சினத்தோய்” 'யானை யிலர் தேர் புரவி யாதுமிலர் ஏவும் தானை யிலர், நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ கூனல் முதுகின் சிறு குரங்கொடு வெல்வார் ஆனவரும் மானுடர், நம் ஆண்மை யழகு அன்றோ? ” குரங்குகள் கூட்டம் செத்து மடியும். மானுடர்கள் போர்க் களத்தில் செத்து மடிவார்கள். தலைகள் மலை போல் குவியும். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். இந்த மானிடர்கள் இருவரும் யானைப் படையில்லாமல் தேர்ப்படையும் குதிரைகளும் இல்லாமல் ஏவுகணைகளில்லாமல், தவவலிமையும். வரங்களின் பல மெதுவுமில்லாமல் வெறும் கூனல் முதுகுக் குரங்குக் கூட்டத்தோடு வந்து நம்மை வெல்வார்களாம், இது வேடிக்கைதான் என்று மேகநாதன் மானுடர்களைப் பற்றி இகழ்ச்சியாகப் பேசுகிறான். நீரும், நிலமும் புயல் காற்றும் நிமிர்ந்த வானமும் உலகிலுள்ள அனைத்து சக்திகளும் ஒன்று திரண்டு வந்தாலும் இந்த நரர்களையும் வானரர்களையும் ஒழித்தே தீருவேன் என்று வீர முரசு கொட்டிப் பேசினான். வீடணன் எழுந்து மேகநாதனைக் கண்டித்தும் இராவணனை வணங்கியும் இலங்கையை எரித்தது வானரமல்ல ஜானகியின் கற்பு என்னும் நெருப்பேயாகுமென்றும் நாம் தளர்ந்து சாய்வது மானுட மடந்தையாலாகுமென்றும், நான் முகனிடத்தில் வரம் பெற்ற போது