பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமபன் -Ջ(Ա, சமுதாயப் பார்வை- 드 சீனிவாசன |63 இன்னும் அயோத்தியில் அரச உரிமையைப் பெற்ற பரதன் அதை மறுத்துத் தனக்கு வேண்டியவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு நாட்டு மக்களுக்கு அறிவித்து இராமனைத் திரும்ப அழைத்து வரக் காட்டுக்குச் செல்கிறான். கங்கைக் கரைக்குச் சென்று குகனைச் சந்திக்கிறான். குகன் முதலில் பரதனைச் சந்தேகப் படுகிறான். பின்னர் உண்மையை உணர்ந்து இருவரும் இணைகிறார்கள். இங்கு தோழமை, நட்பு, சகோதரத்தன்மை ஆகிய சொற்களின் முழுமையான பொருள் வெளிப்படுவதைக் காண்கிறோம். கம்பர் தரும் இந்தக் காட்சி மிக அருமையானதொன்றாகும். “கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டதும் ஒர் அடையாளம்” என்று சீதைக்கு அனுமன் தெரிவித்த அடையாளங்களில் ஒன்றாகப் பெரியாழ்வார் பாடுகிறார். “ஏழை ஏதலன் கீழ் மகன் என்னா திரங்கி மற்றவற்கின்னருள் சுரந்து மாழை மான்டே நோக்கியுன் தோழி உம்பி எம்பி என்றொழி ந்திலை உகந்து தோழன் நீ எனக்கிங் கொழி என்ற சொற்கள் வந்தடி யேன் மனத்திருந்திட ஆழிவண்ண நின் அடியினை யடைந்தேன்” என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார். பரதன் மற்றும் அவனுடைய தம்பி சத்ருக்கனன், தாய்மார்கள் மூவர், சாரதி சுமந்திரன், மற்றுமுள்ள சுற்றமும் படையும் சூழக்கங்கைக் கரையை அடைந்தான். பரதனும் அவனுடைய படை பரிவாரங்களும் கங்கையின் வட கரையில் நிற்கின்றனர். குகன் தன் படை சூழத் தென் கரையில் நிற்கிறான். தொலைவிலிருந்து ஒருவரையொருவர் காண்கின்றனர். குகன் முதலில் சந்தேகப்பட்டுக் கோபம் கொள்கிறான். “அஞ்சனவண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே”