பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 19 கருத்துக்கள் முதலியன பற்றியுமெல்லாம் அவரது கருத்துக்கள் நெடிது நோக்குடன் காலத்தை வென்று நிற்பவைகளாக உள்ளன. மிகவும் பெருமைக்குரியவைகளாகவும் உள்ளன. தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று அவை திரிந்தால் பாலையென்று நால்வகையாகவும், ஐந்து வகையாகவும் பிரித்து அவைகளுக்கேற்ற ஒழுக்கங்களையும், இலக்கணங்களையும், பண்புகளையும் வகுத்துக் கூறியுள்ளனர். அந்தந்த நிலத்திற்குரிய மக்கள் பிரிவுகளையும் அவர்கள் வழிபடும் கடவுளர்களையும், திணைகளையும் வகுத்துக் கூறியுள்ளனர். கம்பன் தனது இராமாவதாரக் காவியத்தை எழுதும் போது இந்த நால்வகை நிலங்களின் தலைவர்களைத் தனது முக்கிய கதாபாத்திரங்களின் பண்புகளில் கொண்டு வந்திருப்பதாகத் தமிழ் அறிஞர்கள் பலரும் எடுத்துக் கூறியுள்ளார்கள். சுக்கீரீவன்,வீடணன், இராமன், குகன் ஆகிய நால்வரும் நால்வகை நிலங்களின் பண்புகளுடன் கூடியவர்கள் என்பதைக் கம்பன் காட்டியுள் ER அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே இராம காதை/பண்டய இனக் குழுக்களின் காலத்தில் தோன்றிய ஒரு கதைப் போக்கு என்பதன் தொடர்ச்சியை விட்டு விடாமல் நால்வகை நிலங்களின் இணைப்பையும், ஒற்றுமையையும் உருவாக்கி பெருநில மன்னனின் விரிவுபட்ட பரந்த மனப்பான்மை கொண்ட, சிறப்புத் தன்மையையும் தலைமையையும் இராமன் வடிவில் கம்பர் காட்சி தருவதைக் காணலாம். அத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாக, இராமனுடைய அவதார மகிமையைத் திருமால் பெருமையை இணைத்து ஒரு மகோன்னதமான சமுதாய லட்சியத்தைக் காட்டியிருப்பது கம்பனுடைய அளப்பரிய இலக்கிய சாதனையாகும். கம்பனது காவியத் தலைவன் திருமால் அவதாரம், ஒழுக்கத்தில் சிறந்தவன், ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உயர்ந்த பண்பாட்டைக் கொண்டவன், ஆயினும் தனது உயர்ந்த லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு எந்த ஒழுக்கமும் இல்லாத வானரப் படைக்குத் தலைமை தாங்குகிறான். இராமனின் தந்தையோ அவனுடைய சமுதாயத்தின் முந்திய கால ஒழுக்கத்தின் பிரதிநிதியாகக் காட்டப் பட்டுள்ளான். இராமனின் எதிரியான இலங்கை அதிபனோ முறை துறந்தவனாகக் காட்டப் பட்டுள்ளான். இராமனுடைய துணை சக்தியாக உள்ள கிட்கிந்தையின் ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லவே