பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. сыйшьт-сый ”37тото этпей காவியமும்’ _X() வேண்டாம். ஆயினும் அந்தக் கிட்கிந்தையைத் தன்னுடைய ஆதர்சத்தால் முன்னுதாரணத்தால் செல்வாக்குப் பிரயோகத்தால் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர முயற்சிக்கிறான். இதை வாலி வதைப் பகுதியில் காண்கிறோம். முதலில் இராமனே "இப்பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ?” என்று குறிப்பிடுகிறான். வாலியின் வாய் மொழியாகத் தங்கள் சமுதாயத்தின் ஒழுக்க இயல்பை, சாதாரண மக்களின் ஒழுக்க இயல்பை எடுத்துக் கூறுகிறான். கடைசியில் இராமன் தனது லட்சிய நோக்கின் பகுதியான அறிவுரையைக் கூறி ஒரு பெரிய மகத்தான உண்மை நெறியை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறார். வாலியின் வாய் மொழியாக, “ஐய! நுங்கள் அருங்குலக்கற்பின் அப் பொய்யில் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் செய்திலன் எமைத் தேமலர் மேலவன், எய்தின் எய்தியதாக இயற்றினான்” என்றும் “மணமும் இல்லை மறைநெறி வந்தன, குணமும் இல்லைக் குலமுதற்கு ஒத்தன உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கலால் நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்” என்றும் கம்பர் குறிப்பிடுகிறார். “உங்கள் மங்கையரைப் போல எங்களை மணம் புரிந்து கொண்டு ஒழுக்கமாக வாழும்படி பிரம்மன் எங்களைப் படைக்கவில்லை. அடைந்ததை அடைந்த படிவாழும் படியாக எங்களைப் படைத்துள்ளான் என்றும், மனம் போனபடியாக வாழும் வாழ்க்கையல்லாமல் மறை நெறியில் வந்த மணமும் இல்லை, குலத்திற்கேற்ற குணமும் இல்லை என்றெல்லாம் வானர சமுதாயத்தின் ஒழுக்கத்தைப் பற்றி வாலி, இராமனிடம் கூறுவதைக் கம்பன் மிகவும் நுட்பமாக எடுத்துக் காட்டுகிறார். இப்படித்தான்