பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 35 விமர்சன முறைகளிலும் ஏற்பட்டன. இருப்பினும் அவை நமது பண்பாட்டு வட்டத்திற்குள் நின்றுதான் வெளிப் பட்டிருக்கின்றன. கம்பனின் இராமாவதாரக் காவியத்தைப் பற்றியும், கம்பனுடைய கவிதைகள், கதாபாத்திரங்கள், பாத்திரப் படைப்புகள், பாத்திரச் சிறப்புகள் பற்றியும் பக்தர்களின் முறையிலும் பண்டிதர்களின் முறையிலும் மட்டுமல்லாமல் இலக்கிய முறையிலும் கம்பன் பேசப் பட்டான். இந்த முறையில் ஒரு புதிய தலைமுறையே தோன்றிக் கம்பனைப் பற்றிப் பல விளக்கங்களும், மதிப்பீடுகளும், ஒப்Aடுகளும் வந்திருக்கின்றன. கம்ப ராமாயணமும் இதர இராமாயணங்களும் ஒப்பிடப் படுகின்றன. கம்பனும் இதர கவிஞர்களும் ஒப்பிடப் படுகிறார்கள். கம்பனும் இதர இந்தியக் கவிஞர்களும் மேல் நாடுகளின் கவிஞர்களும் ஒப்பிடப் படுகிறார்கள். இவ்வாறு கம்பன் விரிவடைந்தான். கம்பனுடைய புகழ் பாரத நாடு முழுவதிலும் மற்றும் பல உலக நாடுகளிலும் பரவி வருகிறது. கம்பனுடைய படைப்புகள், கவிதை நயம் உலக இலக்கியப் படைப்புகளுடன் ஒப்பிடப் பட்டு கம்பனுடைய உயர்ச்சி வெளிப்பட்டு வருகிறது. இவ்வாறு கம்பன் மேலும் விரிவடைந்து வருகிறான். நாடு விடுதலை பெற்ற பின்னர் கம்பனைப் படிக்க இப்போது எவ்விதத் தடையோ, தயக்கமோ, இடையூறோ, அமுக்குதலோ, பூட்டுகளோ இல்லை. அவ்வாறு இருந்த சில தடைகள் தாக்குதல்கள் ஆகியவற்றின் உக்கிரமும் தணிந்தது. அத்தகைய எதிர்மறைகள் வெற்றி பெறவில்லை. இப்போது கம்பனைப் படிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. அச்சு எந்திரங்களும் பொது ஜனத் தொடர்பு சாதனங்களும் அந்த வாய்ப்புகளுக்கு மேலும் அதிகமாக உதவுகின்றன. புதிய சிந்தனையோட்டங்களும், புதிய இலக்கியப் பார்வைகளும் விரிவடைந்து வருகின்றன. ஏராளமான ஆராய்ச்சி நூல்களும் வெளி வந்துள்ளன. பல்கலைக் கழகங்களும் பலவேறு பொது அமைப்புகளும் இலக்கிய அமைப்புகளும் இவ்வாராய்ச்சிகளுக்குத் துணை புரிந்து வருகின்றன. ஆர்.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், டி.கே.சிதம்பரநாத முதலியார், வையாபுரிப் பிள்ளை, இராகவய்யங்கார், திரு.நாராயணய்யங்கார் போன்ற பல பெரியார்களும், அறிஞர்களும் கம்ப ராமாயணத்தை விளக்கிப் பேசியும், எழுதியும் புதிய