பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

மனிதனுக்குக் கடவுள் நண்பன், வழிகாட்டி, உதவியாளன், பாவங்களை மன்னித்து சுவர்க்கத்திற்குப் பாதை காட்டுபவன் என்னும் நிலைக்கு அப்பால் சென்று, இந்திய சிந்தனை மனிதனையும் கடவுளையும் ஐக்கியப் படுத்தியிருக்கிறது. அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்னும் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது. மனிதன் தெய்வீகத் தன்மை பெறுவதையும், தெய்வம் மானிட வடிவம் எடுத்து அருஞ் செயல்களாற்றுவதையும் பாரதத்தின் இலக்கியங்களும், இதிகாசங்களும் எடுத்துக் காட்டுகின்றன. இயற்கையோடு இணைந்த, இசைவான மனித வாழ்வை இந்திய சிந்தனை வலியுறுத்தி வந்திருக்கிறது. இக் கருத்தின் மெய்மையை இன்று அனைத்துலகமும் உணரத் தொடங்கியிருப்பதைக் காண்கிறோம்.

உலகம் அனைத்தையும், உலகின் அனைத்துப் பொருள்களையும் ஆக்குதலையும், நிலைப் பெறச் செய்தலையும், நீக்குதலையும் இடை விடாத பணிகளாகச் செய்து கொண்டேயிருப்பதை ஆண்டவனுடைய பணியாக இந்திய சிந்தனை வடித்துக் காட்டியிருக்கிறது.

மனிதனுக்கும் - மனிதனுக்கும், மனிதனுக்கும் இதர ஜீவ ராசிகளுக்கும் மனிதனுக்கும் இதர பொருள்களுக்கும் இடையில் ஒரு ஒன்றிணைப்பைக் கொண்டு வரும் சிந்தனையை இந்திய சிந்தனை உருவாக்கி வளர்த்திருக்கிறது.

மனிதனுக்கும் பஞ்ச பூத சக்திகளுக்கும் இதர இயற்கை சக்திகளுக்கும் இடையிலான தொடர்பு இணைப்புகளையும், அவ்வியற்கையின் பகுதிகளான மண், ஆறு, மலை, காற்று, நெருப்பு, வானம், தண்ணீர், சூரிய சந்திரர்கள், இதர கிரகங்கள், இயற்கையின் இதர படைப்புகளான பறவைகள், விலங்குகள், மற்றும் இதர உயிரினங்கள் அனைத்தையும் அவைகளின் ஒன்றிணைப்பையும் இந்திய சிந்தனை வலியுறுத்துகிறது. இந்த மேலான கருத்துக்களை மானுட இணைப்புடன் இந்திய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் காணலாம்.

இராமாயணம், மகாபாரதம் என்னும் பேரிலக்கியங்களான நமது இதிகாசங்கள் பாரதத்தின் உயர்ந்த சிந்தனைகளுக்கு{{{pagenum}}}