பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

அடித்தளமாக அமைந்திருக்கின்றன. அவை உலகளாவிய அனைத்தளாவிய தன்மைகளையும் கொண்டிருக்கின்றன. நாம் அவைகளை உலக மயமாக்க வேண்டும்.

லோக க்ஷேமம் - உலக நன்மை அதுவே பாரதப் பண்பாட்டின் மையப் புள்ளியாகும். இதையே நமது இலக்கியங்களும், சாத்திரங்களும் வலியுறுத்துகின்றன. இதையே ஆண்டவன் தனது அவதாரக் கடமையாக நிறைவேற்றியுள்ளார்.

வால்மீகியின் இராமாயணம் இக்கருத்துக்களை மிகவும் கம்பீரமாக உலகுக்கு எடுத்துக் கூறுகிறது. கம்பனோ, சந்தத்திலும், இசையிலும் தொனியிலும் வால்மீகிக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் எல்லையொன்றின்மையை ஆண்டவனின் இப் பேருலகின் அனந்தமான வடிவத்தைத் தனது குறிகளால் உலகுக்குக் காட்டுகிறார்.

மனித சிந்தனையை ஒருமுகப் படுத்துவதில் கம்பன் தனது இராமாவதாரக் கதையின் மூலம் மிகச் சிறந்த பங்கை ஆற்றியுள்ளார்.

தமிழகத்தில் சென்ற நூற்றாண்டின் மத்தியில் இராமாயணக் கதையைப் பற்றியும் கம்பனைப் பற்றியும் சில பகுதிகளில் சில தப்பெண்ணங்கள் காரணமாக சில வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் தமிழக மக்களுக்கு நன்மைகளைக் காட்டிலும் தீங்குகளே அதிகம் விளைந்திருக்கின்றன. கம்பனுடைய மகத்தான சிந்தனை வளத்தைப் பருகுவதில் நமக்கு பாதிப்புகளும் வாய்ப்புக் குறைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அத்தகைய தடைகளையும் தாண்டிக் கம்பனைத் தமிழகத்தின், பாரதத்தின் உலகின் பொதுச் சொத்தாக்க வேண்டும் என்பதை இந்த நூல் வேண்டிக் கொள்கிறது. உலகமெல்லாம் தமிழ் முழக்கம் செய்வதற்கு கம்பனும் வள்ளுவனும் முன்னோடியாக இருக்கட்டும். அந்த வகையில் தமிழகத்தின் பல்கலைக் கழகங்களும் உயர் கல்வி நிலையங்களும் கம்பனுக்குத் தனித்துறை அமைத்து, ஆய்வுகள் பல செய்து அவனது உயர்ந்த கருத்துக்களையும், கவிச் சிறப்புகளையும் உலகெங்கும் பரப்ப வேண்டும்.

{{{pagenum}}}