பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ыйшейт — 5әсъ әсрәлили штвовал —=у. Збойылғайт 47 கணங்களாகவும் தேவதைகளாகவும் கொள்ளப்படுகின்றனவென்று விளக்கங்கள் வந்துள்ளன. தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கின்றானோ அவனே கண்ணுடையவன் என்பது வேதத்தின் முடிவான கருத்தாகும். மிருக நிலையிலிருந்து மனிதனைத் தேவ நிலைக்குக் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப்பள்ளிக் கூடங்களே கோவில்கள் என்றும், அக்கோவில்களால் ஊர் ஒற்றுமை நிறைவேறும் என்றும் பாரதி குறிப்பிடுகிறார். கம்பனுடைய மகா காவியம் ஒரு புதிய தெளிவான ஒளியைக் காட்டுகிறது. அவர் காலத்தில் பலவேறு சமயங்களைச் சார்ந்த மக்களையும் ஒன்றுபடுத்த அவரது மகா காவியம் உதவியுள்ளது, துணையாக விருந்திருக்கிறதென்பதையும் காணலாம். உலகம் முழுவதும் செய்கைமயமாக இடைவிடாத இயக்கத்தின் மயமாக நிற்கிறது, நிலைபெறுகிறது, மாறுகிறது, பழய நிலை நீங்கி புதிய நிலை ஏற்படுகிறது. விரும்புதல், அறிதல், நடத்தல் ஆகிய மூவகையான சக்திகள் உலகை ஆளுகின்றன. இதைப் பண்டையச் சாத்திரங்கள் இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்று குறிப்பிடுகின்றன. இதைக் கம்பனின் மகாகாவியத்தில் நாம் காண முடிகிறது. ஆதிசங்கரர், பெளத்த சமண சமயக்கருத்துக்களை எதிர்த்த போது தனக்குச் சாதகமாக வேதத்தை ஒப்புக் கொள்ளும் பல பிரிவுகளையும் ஒன்றாக இணைத்துக் கொண்டார். இவர்களுக் கிடையிலிருந்த பிணக்குகளை நீக்கிப் பொதுவான கருத்துக்களை இணைத்து வேத சமயத்திற்குப் புத்துயிர் கொடுத்தார். வேதங்களை ஆதாரமாகக்_கொண்டோர்_பொதுவாக ஆறு சமயங்களாகப் பிரிந்திருந்தனர். அந்த ஆறு பிரிஒளிர்களையும் ஆதிசங்கரர் ஒன்று படுத்தினார். அந்த ஆறு சமயங்களாவன. 1. ஐந்திரம்: தேவர்களின் தலைவனான இந்திரனை முதல் கடவுளாக வழிபடுவது 2. ஆக்னேயம்: அக்கினியே முதற்கடவுள் என்று வழிபடுவதாகும்