பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. *tbuggyeo–u கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் 62 வண்ணத்தையும் கால் வண்ணத்தையும் கம்பன் மிக அழகாக தனது அற்புதமான கவிதையில் எடுத்துக் கூறியுள்ளார். இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; (இனி இந்த உலகுக்கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் (துயர் வண்ணம் உறுவதுண்டோ மைவண்ணத்தரக்கி போரில் (மழை வண்ணத்தண்ணலே உன் கைவண்ணம் அங்கு கண்டேன்; (கால்வண்ணம் இங்கு கண்டேன் என்று கம்பர் பாடுகிறார். இவ்வாறுதான் நிகழ்ந்தது, இனி இந்த உலகத்து உயிர்களுக்கெல்லாம் பிழைக்கும் தன்மை (பாதுகாப்பு) ஏற்பட்டுள்ளது அல்லாமல் இனி துன்ப நிலை இல்லை. கருமை நிற அரக்கியைப் போரில் மாய்த்ததில் நீலநிற வள்ளலே உனது கை திறனைக் கண்டேன். இப்போது உனது கால்த்திறனைக் கண்டேன் என்பது இப்பாடலின் பொருள். உலகத்து உயிர்களையெல்லாம் உய்விக்கும் தெய்வீக இராமனின் கைத் திறனையும் காலின் மகிமையையும் கம்பன் போற்றிப் பாடுகிறார். - இந்தக் கவிதை வடிவத்திற்கு இணையாக சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டம் காடு காண் காதையில், கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் உறையூரை நீங்கி ஒரு சோலையுள் ஒரு மண்டபத்தையடைந்த போது மாங்காட்டு மறையோன் என்னும் ஒரு முதிய அந்தணன் தனது ஊரையும் அவனது பயணத்தின் நோக்கத்தையும் குறிப்பிடும் போது, “திருவரங்கத்தில் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்,” “திருவேங்கடத்தில் செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்” என்னும் வரிகளைக் காண்கிறோம்.