பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கம்பனுடைய கடவட்கொள்கையும் சமயக் கொள்கையும் 64 “தயரதன் புதல்வன் என்பார் தாமரைக் கண்ணன் என்பார் புயல் இவன் மேனி யென்பார் பூவையும் பொருவுமென்பார் மயல் உடைத்துலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார்.” என்று மக்களின் சொல்லால் இராமன் மானிடன் அல்ல, கடவுளேயாகும் என்று கம்பன் கூறுகிmார். அயோத்தியில் தாங்கள் செய்தி தவப் பயன் காரணமாக, சங்கு சக்கரம் ஏந்திய தனி முதல் கடவுளாகிய திருமாலே இராமனாக வந்து எங்களுடைய அரசனாக வந்துள்ளான் அதனால் இந்த மங்கையும் அதாவது சீதையும் தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமியே ஆவாள் என்று வசிட்டன் மகிழ்ச்சியடைந்தான் என்று கம்பன், இராமனும், சீதையும் மணம் முடிக்க விருந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். இராமனையும், சீதையையும் திருமால் மற்றும் இலக்குமியின் அவதாரமாகவும் திருமாலே அரசன் என்னும் கருத்தையே கம்பன் இங்கு எடுத்துக் கூறியுள்ளார். “எங்கள் செய்தவத்தினில் இராமன் என வந்தோன் சங்கினொடு சக்கரம் உடைத் தனி முதல், பேர் அங்கண் அரசு, ஆதலின் அவ் வல்லி மலர் புல்லும் மங்கையிவள் ஆம் என வசிட்டன் மகிழ்வுற்றான்” என்பது கம்பனது பாடலாகும்.