பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusйт –ёәQ, «Qрғылшй шптіsosv– ~~}_osofkалғай? 65 பரசு ராமனுடைய வருகையைப் பற்றிக் கம்பன் கூறும் போது, ‘பாழிப்புயம் உயர்திக்கிடை அடையப்புடை படரச் சூழிச்சடை முடி விண் தொட அயல் விண் மதி தொத்த ஆழிப்புனல், எரி, கால், நிலம் ஆகாயமும் அழியும் ஊழிக்கடை முடிவில் தனி உமை கேள்வனை யொப்பான்?” என்று குறிப்பிடுகிறார். வலிமை பொருந்திய, திசைகள் அனைத்திலும் உயர்ந்த தோள்களையும் விண்ணைத் தொடக் கூடிய சடை முடிகளையும் கொண்ட பரசுராமன் கோபக் கனலுடன் வந்த தோற்றம் கடல் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் அழிகின்ற ஊழியின் இறுதிக் காலத்தில் கோபக்கனலுடன் நிற்கும் உமையின் கணவனான சிவனைப் போலிருந்தது என்று கோபத்துடன் வந்த பரசுராமனுக்கு சிவனை ஒப்பிட்டுக் கூறுகிறார் கம்பன். இங்கு பரசுராமனைச் சிவபெருமானுடன் ஒப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். பஞ்சபூத சக்திகளுக்கும் பிரளய காலத்திற்கும் ஒப்பான சிவனுக்கு ஈடான பரசுராமனைப் பின்னர் திருமாலின் புதிய அவதாரமான இராமன் வென்றான் என்பதை மறை பொருளாகக் காட்டுவதற்காக, திருமாலின் மேன்மையைக் காட்டுவதற்காக விருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆயினும் பரசுராமனும் திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகவே நமது சாத்திரங்கள் கூறுகின்றன என்பதை அறிவோம். பரசுராமனின் பலமனைத்தையும் இராமன் எடுத்துக் கொண்டதாகவே இராமாயணக்கதை நிகழ்ச்சி கூறுகிறது. பரசுராமன் - இராமன் சந்திப்பும் விவாதமும் ஒரு பெரிய வரலாற்று உண்மைப் பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.