பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் յ2CՄ, 4Орэтил, பார்வை-அ,_சினிவாசன் 73 அரசன் திருமாலுக்கிணையானவன் என்னும் கருத்து மன்னராட்சி காலத்தில் வலுப் பெற்றிருந்தது என்பதற்கு, “திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே.” என்னும் நம்மாழ்வார் பாடல் வரிகளும் சிறந்த எடுத்துக் காட்டாகும். பரசுராமனுக்கும் இராமனுக்குமிடையில் ஏற்பட்ட மோதல் அவர்களுக்கிடையில் நடைபெற்ற தெய்வீக வுரையாடல், சவால்களின் முடிவு “எண்ணிய பொருளெலாம் இனிது முற்றுக’ என்னும் உயர்ந்த கருத்துக்களெல்லாம் ஒரு அடிப்படையான சமுதாய மாற்றத்தைக் குறிக்கும் ஒ. அபூர்வமான கட்டமாகும். பரசுராமன் வரவுக்குப் பின்னால் இராமன் முழுமையான அவதாரப் பெருமையை அடைவதைத் திருமாலின் முழுமையான சக்தியாகக் கம்பன் தனது மகாகாவியத்தில் காட்டுகிறார். சமுதாய நோக்கில் மன்னராட்சி முறையின் முழு வடிவமாக, ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இராமனது பாத்திரம் அந்த தெய்வீகச் சாதனை வளர்ச்சி பெற்று முழுமையடைவதைக் காணலாம். இராமன், பரசுராமனை வெற்றி கொண்டு, அயோத்தியின் பட்டத்திற்குத் தயாராகி, பரதனிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து விட்டு, குகனையும் அவனது கங்கைக்கரை பூமிகளையும் இணைத்துக் கொண்டு, வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு ஆட்சியைக் கொடுத்து, வானரப்படைக்குத் தலைமை தாங்கி, இராவணனை வென்று விடணனை இலங்கைக்கு அரசனாக்கி, தனது பேரரசை நட்புறவோடு கூடிய ஒன்று பட்ட பாரத மகா சாம்ராஜ்யத்தைத் தெய்வீகத் தன்மையுடன் விரிவு படுத்துவதைக் காண்கிறோம். கம்பன் இங்கு, இராமனுடைய வரலாற்றுப் பாத்திரத்தை, பாரத நாட்டின் ஒன்றுமையையும் ஒருமைப் பாட்டையும் நட்புறவோடு கூடிய ஒன்றிணைப்பையும் வெற்றி கரமாக நிறைவேற்றும் வரலாற்றுப் பாத்திரத்தைச் சிறப்பித்துக் காட்டி, அந்த இராமனைத் தெய்வீக நிலைக்கு உயர்த்தித் தனது வேதாந்தத் தத்துவ ஞானக்கடவுட் கொள்கையைத் தனது மகா காவியத்தின் மூலம் விளக்கிக் கூறித் தெளிவு படுத்திக் காட்டுகிறார்.