கம்பன் கண்ட புலன் அடக்கம் 107 எண்ணப்பட வேண்டியவனாகவும் காணுகின்றான். எந்த அடிப்படையிருந்தால் இந்த இளம் வயதிலேயே அனுமன் கல்லாத கலையும் வேதக் கடலும் இல்லை என்று கலைச் செல்வனாம் இராமனே சொல்லமுடியும்! அமரருள் வைக்கும் அடக்கம் அனுமனிடம் உள்ள காரணத்தினால் தான் அடக்கத்தின் பின்னே வருகின்ற அனைத்துப் பண்புகளையும் பெற்றுவிடுகின்றான் அனுமன் என்பதை, குறிப்பில் குறிப்புணர்பவனாகிய இராமனால் காண முடிகின்றது. ஆகவே புலன் அடக்கத்தின் எல்லையற்ற பெருமையை, உருவால் சிறியவனும் மானிட வடிவங்கூட அல்லாமல் விலங்கு வடிவம் கொண்டவனுமாகிய ஒருவன் மாட்டு வைத்து, வெகு அழகாக நமக்குக் காட்டுகின்றான் கமபநாடன. விலங்கு நிலையில் உள்ள அனுமனிடம் புலனடக்கம் கண்ட பிறகு மானிட நிலைமைக்கு வருகின்றோம். கம்பன் கண்ட மானிடருள் புலன் அடக்கம் என்றதும் நினைவுக்கு வருகின்றவன் பரதன். இந்திரியங்களை அவித்து இருத்தல் மேயினான்' என்கிறான் கவிஞன். இந்திரியங்களை அவித்தானாம் பரதன். வள்ளுவனுடைய 'அவித்தல் என்ற இந்த அழகான சொல்லைப் பயன்படுத்தியமைக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் கம்பனுக்கு? நாம்கூட இக்காலத்தில் இச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். 'நெருப்பில் கொஞ்சம் தண்ணிர் ஊற்றி அவி' என்று சொல்லுகிறோம். இந்திரியங்கள் இருக்கின்றன. தொழில் படக்கூடிய இந்திரியங்கள். ஆனால், அவற்றை அவித்தா னாம் பரதன். அவை தாமே செத்துப் போய்விட்டாலும் புண்ணியமில்லை. அவ்வாறாயின் அது மயக்க மருந்து உட்கொண்டு இருப்பதுபோல ஆகிவிடும். பொறி புலன்கள் உண்டு அவனிடம்; ஆனால், அவற்றை அடக்கி ஆள்கின்றான். அவித்தல் எதன்மூலம்? நெருப்பைத் தண்ணிரால் அவிக்கின்றோம். ஆனால் பொறி புலன்களை
பக்கம்:கம்பன் கலை.pdf/117
Appearance