பக்கம்:கம்பன் கலை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கம்பன் கலை மன உறுதி என்ற ஒன்றாலேதான் அவிக்க முடியும். அந்த உறுதியில்லாதவிடத்து, பொறி புலன்களை அவித்தல் இயலாத காரியம். ஆகவே, இந்திரியங்களை அவித்து இருத்தல் மேயினான் என்றால் தன்னுடைய உறுதி என்ற ஒன்றினாலே பரதன் அவித்து விட்டான். பிடிவாதத்துடன் இந்திரியங்களை அவித்தவர்கள் பலர் உண்டு. ஆனால், அவித்த பிறகு அவர்கள் இருக்க மாட்டார்கள். பொறுக்க முடியாத இந்தத் துயரத்தைப் போக்கிக் கொள்ள எனது உயிரையே மாய்த்துக் கொள்கிறேன்' என்று கடிதத்தை எழுதிவைத்துவிட்டுப் போவார்கள். இவ்வாறு செய்வதாற் பயன் யாது? அதை நினைந்து பார்க்கின்றான் கம்பன் இங்கே பொறி புல இந்திரியங்களை அவித்து' என்று அதோடு நிறுத்தாமல், இருத்தல் மேயினான் என்று கூறுகின்றான். பொறிபுலன்களை அவித்தவர்கள் நீண்ட காலம் வாழ்வது என்பது கடினம். ஆனால், இதோ பரதனைப் பாருங்கள். இவன் வானுறையும் தெய்வத்துள் போகின்ற சூழ்நிலையில் பொறிபுலன்களை உறுதி என்னும் துணை கொண்டு அவித்தான், அந்த அவித்தலாகிய முயற்சியில் இறந்துவிட்டான் என்று யாரும் கருதிவிட வேண்டா! இருத்தல் மேயினான்! இருத்தலைப் பொருந்தினான் என்று சொல்லும்பொழுது, அவித்தலில் இருக்கின்ற பெருந்தொல்லையும், அவித்தல் முயற்சியில் பலரும் தோற்றுப் போகின்ற உண்மையும், ஆனால் பரதன் அவித்தலாகிய பெருஞ் செயலைச் செய்து பின்னரும் வாழுகின்ற ஒரு பேருண்மையும் ஆகிய எல்லாவற்றையும் எடுத்துக் காட்டிவிடுகின்றான் கவிச்சக்கரவர்த்தி. 'இந்திரியங்களை அவித்து இருத்தல் மேயினான் யார்? அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான். இதுவும் நமக்கு ஒரு பேருண்மையை எடுத்துக் காட்டுகின்றது. இந்தப் பொறி புலன்களை அடக்கத் தொடங்குகின்றவர்கள் எத்தகைய வழியை மேற்கொள்ளவேண்டும்? திடீரென்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/118&oldid=770627" இலிருந்து மீள்விக்கப்பட்டது