பக்கம்:கம்பன் கலை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலி-ஒரு புதிய கண்ணோட்டம் 125 மறந்து ஏன் தன்னைக் கொல்ல வேண்டும் என்று கேட்கிறது புறமனம். தன் சிற்றறிவுக்குப் புலப்படாவிடினும் "எங்கோ ஒரு காரணம் இருக்க வேண்டும்; அதனால்தான் பகை இன்றியும் இராமன் கொன்றான் என்று கூறுகிறது அவனுடைய அகமணம். முற்பகுதியில் புறமனத்தினால் ஆட்கொள்ளப்பெற்ற வாலி இராமனை ஏசுவது உண்மைதான். ஆனால் அவ்வாறு ஏசும் பொழுதேகூடத் தான் நினைப்பது சரிதானா என்ற வினாவை அவனுடைய அக மனம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தன் சிற்றறிவுக்கும் உலகியல் அறத்துக்கும் கட்டுப்பட்டு நின்று கண்டால் இராமன் செயல் தவறுடையதுதான். ஐயமே இல்லை! ஆனால் சிற்றறிவுக்கு மேற்பட்ட பேரறிவு ஒன்றும், உலகியல் என்பதற்கு மாறான உலகியல் கடந்த நிலை ஒன்றும் உண்டல்லவா? சிற்றறிவினால் மெய்ம்மை என்று ஏற்றுக்கொள்ளப் பெற்ற ஒன்று அவ்வறிவு வளர்ச்சி யடையும் பொழுது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிவிடலாம். அதேபோல உலகியலில் இன்று தவறானது எனப்படும் ஒன்று நாளை நியாயமானது என ஏற்கப்படலாம். ஆனால், பேரறிவு காணும் நியாய அநியாயங்கள் அவ்வாறு மாறுபடக் காரணமில்லை. தான் காணும் உண்மை, சாதாரண உலகியல் நிலையில் ஏற்கப்படுகிறதா இல்லையா என்பது பற்றிப் பேரறிவு கவலைப்படுவதில்லை. வாலி, தான் பெற்ற நயன தீட்சையால் பேரறிவு விளங்கப் பெறுகிறான். அதன் பயனாக எதிரே நிற்பவனைக் கார்முகில் கமலம் பூத்த பரம்பொருளாகக் காண்கிறான். எனவே, அப்பரம்பொருள் செய்யும், செய்கின்ற, செய்த செயல்களைத் தன் சிற்றறிவு கொண்டு ஆய்வது தவறு என்றும் உணர்கிறான். பேரறிவில் இவ்விளக்கம் தோன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/136&oldid=770647" இலிருந்து மீள்விக்கப்பட்டது