பக்கம்:கம்பன் கலை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பாட்டுடையான் 159 இருந்ததாகவே அறியமுடியவில்லை. அவன் காதல் மைந்தனாகிய இராமன்தான் வாழ்நாள் முழுவதும் அயோத்தி வேந்தன் மன அரங்கில் விளையாடுகின்றான். இறுதிக் காலத்தில் தசரதன் மனம் முழுவதிலும் பரதன் நிரம்பி இருக்கிறான். ஆனால், இந்த இரண்டிற்கும் பெரிய வேறுபாடு உண்டு. இராமன் நிறைந்திருக்கும் பொழுது தசரதன் மனம் ஆனந்தக் கடலில் துளையமாடுகின்றது. பரதன் நினைவு வந்தவுடனேயே எல்லையற்ற வெறுப்புக்கொண்டு தன்னையும் வருத்திக் கொண்டு, பிறரையும் வருத்துகிறான் கைகேயியின் கணவன். இரண்டு புதல்வர்கள் இப்படியிருக்க, மூன்றாவது புதல்வனாகிய இலக்குவன் இராமனுடைய நிழலாகவே கன்டசி வரை இருந்து கற்போர் மனத்தில் நீங்கா இடம் பெற்றுவிடுகிறான். இராமனுடன் செல்லும் அவன், தம்பி யென்னும் படிக்கு அல்லாமல் அடியரின் ஏவல் செய்கின்றான். அடியனைப் போல ஏவல் செய்பவனேயாயினும், பல சமயங்களில் அவனுடைய கோபம் கட்டுக்கடங்காத நிலையில் செல்லவே நம்மை வியப்பிலாழ்த்தி விடுகின்றான். இராமனே கூறுகின்றபடி, உலகம் ஏழினோடு ஏழையும் கலக்குவன் என்று இலக்குவன் கருதுகிறான். எனவே, இந்த மைந்தனையும் மறத்தல் இயலாத காரியம். மூன்று மைந்தர்கள் நம்மிடையே உழன்று நம் கவனம் முழுவதையும் எடுத்துக் கொள்வதால் தான்காவது மைந்தனைப் பற்றி தாம் கவலை கொள்வது. இல்லை. நாம் மட்டுமென்ன? பெற்ற தந்தையே கவலை கொள்வதாகவும். தெரியவில்லை. இந்த இரண்டையும் கருதிப் போலும் கம்பநாடனும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆகவே, பத்தாயிரம் பாடல் பாடிய அவனும் நான்காவது தம்பிக்கு ஒரு பாடலே தந்துள்ளான். ஒருவேளை பத்தாயிரத்துள் ஒருவனாக நான்காவது தம்பியைக் கருதவேண்டுமென்று கவிஞன் எண்ணினான் போலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/170&oldid=770685" இலிருந்து மீள்விக்கப்பட்டது