168 ல் கம்பன் கலை பயன்படுத்துவதன் மூலமாக மூன்றாவது அடி முழுவதிலும் பயன்படுத்திய உருவகத்திற்கு ஒப்புமை இல்லாத ஒரு தனிச்சிறப்பைக் கவிஞன் நல்கிவிடுகிறான். "உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை" என்பது தொல்காப்பியம். அதாவது, ஒப்புமை சொல்லவேண்டிய காலத்தில் உயர்ந்த பொருள்களோடு ஒன்றை உவமிக்கவேண்டுமே தவிரத் தாழ்ந்த பொருள்களோடு உவமித்தல் ஆகாது என்பதே இதன் கருத்தாகும். ஒருவனுடைய சிறந்த வல்லமைக்கு உவமை கூற வேண்டுமானால், யானையைப் போன்ற வல்லமை யுடையான் என்று கூறவேண்டுமே தவிர, எருமை அல்லது பன்றி போன்ற வல்லமையுடையவன் என்று கூறுதல் ஆகாது. வல்லமை என்பதை மட்டும் எடுத்துக்கொண்டால் பன்றி, எருமை என்ற இரண்டும் உவமைக்குத் தகுந்த பொருள்களாயினும், அவை தாழ்ந்த விலங்குகளாதலின் உவமைக்கு ஏற்றவை அல்ல. இதையும் மீறி எங்காவது ஓரிடத்தில் கவிஞன் தாழ்ந்த உவமையைக் கையாளுவானே யாகில் அதற்கு ஒரு தனிக் கருத்து இருத்தல் வேண்டும். அதுவும் கம்பன், சேக்கிழார் போன்ற கவிச்சக்கரவர்த்திகள் இத்தாழ்ந்த உவமையைப் பயன்படுத்துவார்களேயானால் நிச்ச்யமாக அதில் ஒர் உட்கருத்து அடங்கி இருக்கும். எனவே, கவிதையைப் படிக்கின்றவர்கள் இக்கருத்தை உணர்ந்து, சிந்திக்க முற்படவேண்டும். கண்ணப்பர் என்று கூறப்பெறும் திண்ணனார், நாணன் என்ற வேடனுடன் காளத்தி மலைமேல் ஏறினார். அங்குக் குடுமித் தேவரைக் (காளத்தி மலைமேலுள்ள இறைவனின் பெயர்) கண்டு அவரை அணைத்துக்கொண்டு மயங்கி நின்று இறங்கி வரவும் மனமில்லாது மலையிலேயே நெடும்பொழுது தங்கி விட்டார். இறுதியில், நாணன் உடன் இருப்பதை அறவே மறந்து, மலையில் இருந்து கீழே இறங்கி வருகிறார். திண்ணனாருடன் வேட்டைக்குச் சென்ற காடன் என்ற
பக்கம்:கம்பன் கலை.pdf/179
Appearance