பக்கம்:கம்பன் கலை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 ) கம்பன் கலை எந்த உவமையையும் இலக்குவன் கையாண்டு இருப்பினும் அவனுடைய தாழ்ந்துவிட்ட மனநிலையை அவ்வுவமை எடுத்துக் காட்டாது. இவ்வாறு இலக்குவன் கூறும் "உவமையின் மூலமாகவே அவன் மனநிலையை எடுத்துக் காட்டுவதை விட்டுவிட்டுக் கவிஞன் நூறு பாடல்கள் மூலம் இலக்குவன் மனநிலையை எடுத்துக்கூறி இருப்பினும் இப்பயன் விளையாது. மேலாகப் பார்ப்பவர்கள் உவமை என்று நினைத்து விட்டுவிட, ஆழ்ந்து சிந்திப்பவர்கள் இலக்குவன் மனநிலையை அப்படியே படம்போல் காண வழி வகுத்துவிட்டான் கவிஞன். எனவே, இந்த அற்புதமான உவமையைக் கையாள்வதன்மூலம் கவிச்சக்கரவர்த்தி இலக்குவனுடைய தாழ்ந்துவிட்ட மனோநிலையைக் காட்ட முடிந்ததுடன், தன்னுடைய கவித் திறத்தையும் உலகிற்குக் காட்டிவிடுகின்றான். உவமை ஒன்றால்மட்டும் புலமையை அளந்துவிட முடியும் என்பதற்கு இது ஒன்றே நல்ல எடுத்துக்காட்டாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/183&oldid=770699" இலிருந்து மீள்விக்கப்பட்டது