பக்கம்:கம்பன் கலை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரணில் முழுமுதல் 179 விரிந்துள்ள இறைவனின் திருவடிகள். ஆனால், ஒன்றனோடு ஒன்று முரண்பட்டு நிற்கும் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்றவற்றில் உறைந்தால் அப்பொருள்கள் எவ்வாறு அத்திருவடியைப் பொறுத்துக் கொண்டுள்ளன ? (விராதன் வதை-47) என்று பேசுகிறான் கவிஞன். - முரண் கடந்து நிற்கும் முழுமுதலைப் பற்றி எளிய மானிடன் சிந்திக்கத் தொடங்கினால் என்ன அறிய முடியும்? உலகின் முரண்பாடுகளிற் சிக்கி அவற்றிலிருந்து மீண்டு வரமுடியாமல் தத்தளிக்கும் மனிதன், முரண்பட்ட பொருள்களில் முரண்பாட்டைத் தவிர ஒருமைப்பாட்டை அறியமுடியாத சிற்றறிவு படைத்த மனிதன், என்ன செய்ய முடியும்? முரண்பாட்டின் இடையே நின்று முரணில்லாத முழுமுதலைக் காண்டவன் அதன் தன்மையை அறியமுடியாமல் அதுவும் ஒரு மாயையோ என நினைக்கிறான். ஆனால், ஒரு சிலர் இந்திலையைக் கடந்து சென்று முரணின் இடையே முரண்பாடற்ற தன்மையை, அதாவது, ஒருமைப்பாட்டைக் காண்கின்றனர். அவ்வாறு ஒருமைப்பாட்டைக் காணக் கூடிய அவர்கட்குக்கூட வியப்புத் தோன்றத்தான் செய்கிறது. இந்த இரண்டு மனநிலைகளையும் கவிஞன் மாயை இது என்கொலோ? வாராதே வரவல்லாய்!” (விராதன் வதை-54) என்று பாடுகிறான். வாராமலே வருதல் என்பது ஒரு முரண்பாடுதான். ஆனால், முரண் இல்லாத முழுமுதல் இதனைச் செய்கிறான். எனவே, மாயை இது என் கொலோ’ என்று மனிதன் வியக்கிறான். - ஒரளவு சிந்தனையைச் செலுத்தினால் வாராதே வருதலிலும் முரண்பாடு ஒன்றும் இல்லை என்பது விளங்கும். இதைச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். மனிதன் காணும் முரண்பாட்டிற்குப் பெருங் காரணமாய் அமைவது அவன் பேசும் மொழியேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/190&oldid=770707" இலிருந்து மீள்விக்கப்பட்டது