பக்கம்:கம்பன் கலை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரணில் முழுமுதல் 181 தில்லை. அப்பொருள் வருமா என்று பல காலம் ஏங்கிக்கொண்டிருந்தான். இரவு பகல் இதுவே நினைவாய், வாழ்வில் வேறு குறிக்கோளின்றி அலைந்தான். திடீரென்று ஒருநாள் அவனுள் அந்த அமைதி வந்து புகுந்து கொண்டது. ஆம்! அப்பொருள் தன்னுள் புகுந்தாலொழிய இவ்வகை அமைதி கிடைக்காதாகலான், அவன் பொருளின் வருகையை உணர்ந்துகொண்டான். ஆனால், வந்ததை அவன் காணவில்லை; காணவும் இயலாது. எனவே, 'வாராதே வர வல்லாய் என்று பாடுகிறான் கவிஞன். பொருள் வந்துவிட்டதுபோல் உணர்ச்சி. ஏற்பட்டதற்குக் காரணம் பேரமைதி என்று கூறினோம். ஆனால் இவ்வுலக நியாயங்கட்குக் கட்டுப்பட்டு இவ்வமைதி நிலைபெறாமல் போவதும் வருவதுமாக இருந்தது. கிடைத்த பேரமைதி ஒரளவு நீங்கியவுடன் ஏற்பட்ட கலக்கத்தில், முன்னர்க் கிடைத்த பேரமைதிதானும் உண்மையோ பொய்யோ என்ற ஐயம் தோன்றிவிடுகிறது. ஒருவேளை தன் மன மயக்கத்தால்தான் அமைதிபோன்ற ஒரு நிலை ஏற்பட்டதோ என்ற ஐயம் தோன்றுகிறது. இந்நிலையில் இந்த அமைதி கிடைத்த காரணம், இறைவன் தன் மனத்துள் வந்து தங்கியமையால் அன்றோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அப்படியானால், இப்பொழுது அமைதி இழந்த நிலையின் காரணம் யாது? தன்னுள் வந்த பொருள் போய்விட்டதா? வாராதே வந்த பொருள் மீட்டும் போகாததுபோலப் போக்குக் காட்டிப் போய்விட்டதோ என்றும் ஐயம் வலுப்படுகிறது. இந்த ஐயநிலையில் நின்று நம்மாழ்வார் இதோ பாடுகிறார்: மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய் போலே வாராயே வந்தாய் போலே வாராதாய்".-(திருவாய்மொழி 6-10-89) கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் வாராதே வர வல்ல்ாய்' என்று பாடியதும், நம்மாழ்வார் வந்தாய் போலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/192&oldid=770709" இலிருந்து மீள்விக்கப்பட்டது