பக்கம்:கம்பன் கலை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கவிஞன் கண்ட சமரசம் இன்று கிடைக்கும் மிகப் பழைய நூல்களாகிய தொல்காப்பியம், சங்கப் பாடல்கள் ஆகிய அனைத்திலும் தெய்வம், கடவுள் என்பவைபற்றிய குறிப்புகள் ஓரளவு காணப்படுகின்றன. சிறு தெய்வங்கள்பற்றிப் பேசுவதுடன் கடவுள் என்ற முழுமுதற் பொருள்பற்றியும் இந் நூல்களுள் ஆங்காங்கே காண முடிகிறது. சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ள திருமுருகாற்றுப் படையும், பரிபாடல்களில் சில பாடல் களும் முருகன், திருமால் பற்றி விரிவாகவே பேசுகின்றன. இனி, இவற்றை அடுத்துத் தோன்றிய சிலம்பு முதல் நேற்று வந்த பாரதி, பாரதிதாசன் வரை இறைபற்றிப் பேசாதவர்களே இல்லை என்று கூறிவிடலாம். இத் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இறைபற்றிப் பேசும்பொழுது இருவகையில் பேசப் பெறுவதைக் காண முடியும் . . . . முதலாவது இறையன்பின் பக்தி அடிப்படையில் பேசப்படுவதாகும். இரண்டாவது அறிவுபூர்வமாக இறைவனைப்பற்றி ஆயப்புகுந்து பேசப்படுவதாகும். - சங்கப் பாடல்களுள் உள்ள பத்துப்பாட்டில் முதற் பாடலாகவுள்ள திருமுருகாற்றுப்படை இந்த இரண்டு 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/220&oldid=770740" இலிருந்து மீள்விக்கப்பட்டது