பக்கம்:கம்பன் கலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியர் மூவர் ஏன் ? 29 ஆறு கொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள் ஆதி வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்ற தன்றே! (நட்புக்-18, 19) 'நான்முகன் படைத்த உலகங்கள் அனைத்தும் செய்த தவமெல்லாம் திரண்டு இரண்டு வீரர் வடிவு பெற்று வந்தன போலும் என்று முதலில் நினைத்தான். பின்னர் ஆராய்ந்து 'கடவுளர் அனைவரும் உருமாறி மானுட வடிவு பெற்று வந்தனர் போலும் என்றும் நினைந்தான். பின்னர் இராமனை நெருங்கிப் பேசும்பொழுது: 'ஆர் உயிர் துறக்கல் ஆற்றேன்; சரண் உன்னைப் புகுந்தேன்; என்னைத் தாங்குதல் தருமம் என்றால் (நட்புக்-23). ஏனைய குகனும் வீடணனும் இவ்வாறு இராமனிடம் இரந்து தம், துன்பத்தைத் துடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவில்லை. ஆனால் சுக்ரீவன் தன் துன்பத்தைப் (பிறவித் துன்பத்தை அன்று போக்க வேண்டும் என்று. இராமனிடம் சரணம் புகுகின்றான். ஞானியாகிய வீடணன் இராமனிடம் சரணம் புகுவதற்கும் கர்மியாகிய சுக்ரீவன் சரண் உனைப் பகுந்தேன்' என்று கூறுவதற்கும் வேறுபாடு நிரம்ப உண்டு. இறைவனின் அளப்பரிய பெருமையையும், உயிர்களி -னுடைய சிறுமையையும், அவனன்றி வேறு புகலிடம் இல்லாமையையும் அறிந்துகொண்ட ஞானி தன்னை முழுவதும்ாக இறைவனிடம் சரணமாகத் தந்துவிடுகிறான். அவ்வாறு தந்துவிட்ட பிறகு அவனுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கையே இல்லை. அதன் பிறகு வாழும் வாழ்க்கை முழுவதும் இறைவன் பணியை நிறைவேற்றும் ஒரு கருவியாகவே ஞானி வாழ்கிறான். ஆனால் சுக்ரீவன் போன்றவர்கள் சரணம் என்று தன்னைத் தந்தாலும் அது சர்வ பரித்யாகம் அன்று. தங்களுடைய துன்பத்தைத் துடைக்கவேண்டும் என்பதற்காகவே தம்மை அடைக்கலமாகத் தருகின்ற சாதாரண இயல்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/38&oldid=770773" இலிருந்து மீள்விக்கப்பட்டது