பக்கம்:கம்பன் கலை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 61 முயற்சியில் ஈடுபடக் &n L-735), தனிமனிதன். வேண்டுமானால் இவ்வாறு கடமையை மறந்தும் துயர் துடைக்கும் முயற்சியில் ஈடுபடலாம். அது தவறேயாயினும் மன்னிக்கக்கூடிய தவறாகும். ஆனால், காவற் சாகாடு உகைக்கும் மன்னவர்க்கும் அமைச்சர்க்கும் இப் பொதுச் சட்டம் செல்லுபடி ஆவதில்லை. அவர்கள் தாங்கும் பொறுப்புக் காரணமாக அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பொறுத்துக் கொண்டுதான் கடமையை நிறைவேற்ற வேண்டும. சுமந்திரனாகிய அமைச்சனும் தன் தலைவனாகிய தசரதனைப் போலவே துயரைப் பொறுத்துக் கொண்டு கடமையை நிறைவேற்ற முற்படுகிறான். இறைவனின் சோதனை பல சந்தர்ப்பங்களில் மிக வியக்கத் தகுந்த முறையில் வந்து சேரும், மனைவியுடனும் தம்பியுடனும் மிக இன்பமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த இராமனை முதலிற் சென்று கண்டவன் சுமந்திரனாவான். தசரதன் ஏவலால் இராமனை மந்திர சடைக்கு அழைத்துவரச் சென்ற நிலை அது. அங்கே அவர்கள் இருவரும் இருந்த நிலையைக் கண்ணும் மனமும் களிதுளும்பக் கண்டு பேரின்ப முற்றவனும் சுமந்திரனே. இராமனை நோக்கி, "ஐயனே! மன்னவன் ஆணை நின்னை வருமாறு பணித்துளது” என்று கூறினவனும் சுமந்திரனே. மன்னவன் ஏவல் என்ற சொற்களைக் கேட்டவுடன் மறுபேச்சு இன்றி உடனே புறப்பட்டு விட்டான் தந்தை சொல் காக்கும் அத் தனயன். இராமன் ஏறிய தேரைச் சுமந்திரனே செலுத்தினான். இராமன் தெருவில் பொன் தேரில் ஏறி வரும் காட்சியைக் காணப் பெண்களும் ஆண்களும் சூழ்ந்து நிற்கின்றனர். . "வாள்.அ ரத்தவேல் வண்டொடு கெண்டைகள் மறுகச் சாள ரத்தினும் பூத்தன தாமரை மலர்கள்" மந்திரப் படலம், 56,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/71&oldid=770810" இலிருந்து மீள்விக்கப்பட்டது