பக்கம்:கம்பன் கலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.62 ) கம்பன் கலை என்று கவிஞன் கூறும்பொழுது அயோத்தி மாநகரத்து மாதர்கள் அந்த அழகனைக் காணச் சாளரந்தொறும் எட்டிப் பார்த்து நின்ற காட்சி நம் மனக்கண் முன்னர் வருகிறது. உலகெலாம் புகழும் இராமனைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு வருவதால் சுமந்திரனுக்குத்தான் எத்தனை இன்பமும் செருக்கும் இருந்திருக்கும்? முடிசூட்டிக் கொள்ளப் போகும் மன்னனை-தன் மகன் போல் அன்பு பாராட்டும் குமரனை-தன் தேரில் இந்த நல்ல செய்தியை அறிவித்தற்க்ாக ஏற்றிச் செல்லும் எந்தத் தேர்வலான்தான் மகிழாமல் இருக்க முடியும். எனவே, இன்று மகிழ்ச்சிக் கடலில் திளைத்த வண்ணம் தேரை ஒட்டிச் செல்லும் சுமந்திரன், நாளை இதே நேரத்தில் இதே இராமனை இதே தேரில் ஏற்றிக் கொண்டு காட்டுக்கு ஒட்டிச் செல்லப் போகிறோம் என்று நினைத்துத்தான் இருப்பானா? யாரேனும் ஒருவர் அவன் எதிரில் தோன்றி இப்பொழுது, பெருமகிழ்வுடன் நடைபெறும் இத் தேர் ஓட்டம் இன்னுஞ் சிலபொழுதில் பெருந்துயருடன் காடுநோக்கி நடைபெறப் போகிறது என்று கூறி இருப்பின் சுமந்திரன் அக்கூற்றை நம்பியிருப்பானா? அவ்வாறு கூறியவனைச் சும்மா விட்டிருப்பானா? ஒருக்காலும் விட்டிருக்கமாட்டான். என்றாலும் என்ன? நினைக்காதது நடப்பதுதானே இவ்வுலக இயற்கை? மறுநாள் பொழுது விடிந்ததும், மயங்கிக் கிடக்கும் மன்னவன் பெயரால் ஆணை பிறக்கிறது, சுமந்திரனுக்கு! கைகேயியே அந்த ஆணையையும் இட்டிருக்கலாம். என்ன வியப்பான ஆணை? எந்த இராமனை முதல் நாள் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் தேரில் ஏற்றிவந்தானோ, அந்த இராமனைத்தான் இப்பொழுதும் ஏற்றிச்செல்லவேண்டும். அம்மட்டா? இல்லை, இராமனை மணந்த செயலுக்காகச் சீதையையும், அவனை நிழல்போல் பிரியாது நின்ற செயலுக்காக இலக்குவனையும் அல்லவா சேர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/72&oldid=770811" இலிருந்து மீள்விக்கப்பட்டது