பக்கம்:கம்பன் கலை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ) கம்பன் கலை இடத்தில் அழைத்துத் தன் கருத்தை வெளியிட்டான். இராமனுடைய இந்தச் சூழ்ச்சி முறையானது என்பதைச் சுமந்திரன் நன்கு அறிந்து கொண்டான் எனினும் தான் அந்த இரவு நேரத்தில் அருமை மைந்தனை விட்டுவிட்டு மீள வேண்டும் என்று நின்ைத்தவுடன் அவன் இதுவரை அடக்கி வைத்திருந்த துயரம் ஆறாகப் பெருகிவிட்டது. எல்லையற்ற துயரக்கடலில் ஆழ்ந்துவிட்ட சுமந்திரன் தன்னுடைய வெறுக்கத் தகுந்த நிலையை உன்னி நைகிறான். இராமனைக் காடு செல்க என்று கட்டளையிட்ட கைகேயியையும் அக்கட்டள்ையைச் செயலில் நிறைவேற்றி வைத்த தன்னையும் ஒப்பிட்டுப் பார்க்கிறான். ஒரு கொடுமையான செயலைக் கட்டளை இட்டுவிடுவது எவ்வளவு எளிதானது : உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு, "உனக்குத் துக்குத் தண்டனை விதிக்கிறேன்" என்று ஆணையிட்டு விடலாம். ஆனால், அதனைச் செயலளவில் நிறைவேற்றுபவன் எத்தனை மனவேதனை அடைகிறான்! தூக்கில், இடுபவனுக்கும் இடப்படுப வனுக்கும் எவ்விதமான பகைமையும் இல்லை. ஆனால், இடப்படுபவன் இடுபவன் மேல் சினம் கொள்ளக் காரணந்தான் உண்டா? அதுவும் இல்லை. இடுபவன் எதற்காக இத்தண்டனையைத் தருகின்றோம் என்றுகூட அறியாமல்தானே அதை நிறைவேற்றுகின்றான்? அவன் மனத்தில் கருணை நிரம்பி இருக்கலாம். என்றாலும் என்ன? இட்ட கட்டளையைச் செயலளவில் நிறைவேற்றி வைக்கும் அவனைக் கண்டு விரும்புவார் யாருளர்; அவன்மேல் யாதொரு குற்றமும் இல்லை என்று உலகம் அவனைப் புகழ்கிறதா? இல்லையே! அதே போலத்தான் சுமந்திர னுடைய நிலையும் இருக்கிறது. கட்டளை இட்ட கைகேயி இந்தக் கொடிய காட்சியைப் பார்க்கும் தீமை புரியவில்லையே? அதனைக் கண்டும் உயிரை வைத்திருக்கும் கொடுமை சுமந்திரனையன்றோ சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/74&oldid=770813" இலிருந்து மீள்விக்கப்பட்டது