பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127

இரந்தால் அவனால் இயலுமோ ? இயலாது ஏன் ? அவள் தான் இங்கு இருக்கிறாளே !

𝑥𝑥𝑥𝑥

மணி ஆழி — இரத்தினங்கள் கொண்ட திருபாற் கடல் ; அருந்த அந்த தேவர் – அமுதத்தையன்றி வேறு எதையும் அருந்தாத அந்த தேவர்கள்; பெரிதேன் இன்சொல்—பெருமை மிக்க தேன் போலும் இனிய சொல் உடைய ; பெண் இவள் ஒப்பாள் – பெண்ணாகிய இவளை ஒத்த சிறப்புடைய; ஒரு பெண்ணை — மற்றொரு பெண்ணை (அடைய விரும்பித் தன்னிடம் வந்து) இரந்தால் — யாசித்தால் ; தரல் ஆமோ — இப்போது தரல் இயலுமோ ? அமுது என்னும்—தேவாமிர்தம் என்று சொல்லப்படுகிற ; மருந்தே அல்லாது – சாவா மருந்தை அன்றி என் இனி நல்கும் — வேறு எதனைத் தர வல்லது ; இன்னும் – மேலும் ; நான்முகன் தான் தரும் என்றால் — பிரம தேவனே படைத்துத் தருவான் என்றாலும் ; தால் ஆமோ – அவனாலும் அவ்வாறு படைத்துத் தர முடியுமோ — (முடியாது).

𝑥𝑥𝑥𝑥

கொல்லும் வேலும் கூற்றமும்
       என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும் என்ன
       மதர்க்கும் விழி கொண்டாள்
சொல்லும் தன்மைத்து அன்று
       அது குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருகப்
       பெண் கனி நின்றாள்.

பெண் கனி நின்றாள் எப்படி நின்றாள் ? குன்றும், சுவரும், கல்லும் புல்லும் கண்டு உருக நின்றாள்.