பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

இல்‌ விலை—அளவிட முடியாத மதிப்புடைய; ஆரம்‌ கோவைகள்‌; அணிவாரும்‌—முத்து மாலைக்‌ கொத்துக்களைத்‌ தொங்க விடுவாரும்.

𝑥𝑥𝑥𝑥

ளம்‌ கிளர்‌ மணி காலத்‌
          தவழ்‌ சுடர்‌ உமிழ்‌ தீபம்‌
இளம்‌ குளிர்‌ முளையார்‌ நற்‌
          பாலிகை இனம்‌ எங்கும்‌
விளிம்பு பொன்‌ ஒளி நாற
          வெயிலொடு நிலவீனும்‌
பளிங்‌ குடை உயர்‌ திண்ணைப்‌
         பத்தியின்‌ வைப்பாரும்‌

அந்த நகரத்தின்‌ எல்லாப்‌ பகுதிகளிலும்‌ உள்ள மக்கள்‌ தங்கள்‌ வீடுகளை அணி செய்தார்கள்‌. அவர்களுடைய வீட்டு மாடிகளிலே பதிக்கப்‌ பெற்ற இரத்தினக்‌ கற்கள்‌ ஒளி வீசின, சுவர்‌ ஒரங்களிலே பொன்‌ வேலை செய்யப்பட்டிருந்ததாலே அது ஒளி வீசியது. திண்ணைகளிலே வரிசையாக தீபம்‌ ஏற்றி வைத்தார்கள்‌. பாலிகைகளை வரிசையாக வைத்தார்கள்‌.

𝑥𝑥𝑥𝑥

எங்கும்‌—நகரின்‌ எல்லாப்‌ பகுதிகளிலும்‌; தளம்‌ கிளர்‌—மேல்‌ மாடங்களில்‌ பதிக்கப்‌ பெற்ற; மணிகால—இரத்தினங்கள்‌ ஒளி வீச; விளிம்பு—ஓரங்களில்‌; பொன்‌ ஒளி நாற—பொன்‌ வேலைப்பாடுகள்‌ ஒளி வீசுதலால்‌; வெயிலொடு— வெயில்‌ போன்ற ஒளியை ஈனும்‌—வெளியிடுகின்ற; உயர்‌ திண்னை—உயர்ந்த திண்ணைகளிலே; தவழ்‌ சுடர்‌ உமிழ்‌