பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

வெற்றிலை முதலியவற்றையும்‌ ; கனிபல—பல்வகைப்‌ பழங்களையும்‌; தருவாரும்‌—கொண்டுவந்து கொடுப்பவரும்‌; குண்டலம்‌ ஓளி வீச—தம்‌ காதில்‌ அணிந்த குண்டலங்கள்‌ ஓளி வீச; குரவைகள்‌ புரிவாரும்‌—குரவைக்‌ கூத்து ஆடுபவர்களும்‌; உண்டை கொள்‌—சோற்று உருண்டையை உட்‌கொள்ளுகின்ற; மதம்‌ வேழத்து—மத யானைகளுக்கு; ஓடைகள்‌ அணிவாரும்‌—நெற்றிப்‌ பட்டம்‌ சூட்டுவாரும்‌.

𝑥𝑥𝑥𝑥

லவைகள்‌ புனைவாரும்‌
        கலை நல தெரிவாரும்‌
மலர்‌ குழல்‌ மலை வாரும்‌
        மதி முகம்‌ அணி ஆடித்‌
திலதம்‌ முன்‌ இடுவாரும்‌
        சிகழிகை அணிவாரும்‌
இலவு இதழ்‌ பொலி கோலம்‌
        எழில்‌ பெற இடுவாரும்‌.

கலவைச்‌ சந்தனம்‌ பூசிக்‌ கொண்டார்கள்‌, நல்ல ஆடைகளைத்‌ தேர்ந்து எடுத்து உடுத்தினார்கள்‌. கூந்தலிலே பூ சூடிக்‌ கொண்டார்கள்‌. கண்ணாடி முன்‌ நின்று தங்கள்‌ முகத்திலே பொட்டு வைத்துக்‌ கொண்டார்கள்‌. தலை முடியைப்‌ பலவாறு முடிந்து அழகு செய்து கொண்டார்கள்‌. இலவம்‌ பூப்‌ போன்ற உதட்டிலே செந்நிறக்‌ குழம்பு பூசிக்‌கொண்டார்கள்‌.

𝑥𝑥𝑥𝑥

கலவைகள்‌ புனைவாரும்‌ – சந்தனக்‌ கலவைகள்‌ முதலியவற்றைப்‌ பூசிக்‌ கொள்பவரும்‌; கலை நல்ல தெரிவாரும்‌—நல்ல ஆடைகளைத்‌ தேர்ந்தெடுத்து உடுப்பவரும்‌; மலர்‌ குழல்‌

19