பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158


ம்பித்தலை எறிநீர் உறும்
        கலம் ஒத்து உலகு உலையத்
தம்பித் துயர் திசை யானைகள்
        தளரக் கடல் சலியா
வெம்பித் திரிதர வானவர்
        வெருவுற்று இரிதர ஓர்
செம் பொற் சிலே தெறியா அயில்
        முக வாளிகள் தெரிவான்

பொன் ஒளி வீசும் தன்னுடைய வில்லை நாண் ஏற்றி விட்டான் பரசுராமன். அம்புகளைத் தெரிந்தெடுக்கிறான். அந்த நேரத்திலே என்ன நடந்தது?

கொந்தளிக்கும் கடலில் அகப்பட்ட மரக்கலம் போல உலகமும் அதிலுள்ள சராசரங்களும் நடுங்கின; நிலை குலைந்தன. எட்டுத்திக்கிலும் உள்ள யானைகள் அசைவற்றுத் தளர்ந்து நின்றன. கடல்கள் எல்லாம் வெப்பங்கொண்டு கொந்தளித்தன. நிலை பெயர்ந்தன. தேவர்கள் அஞ்சி ஓடினார்கள்.

xxxx

அலை எறி நீர் உறும் கலம் ஒத்து—அலைமோதுகின்ற கடல் நீரில் அகப்பட்ட மரக்கலம் போல; உலகு கம்பித்து உலைய — உலகமும் அதில் உள்ள பொருள்களும் நடுங்கி நிலை குலையவும்; உயர் திசை யானைகள் – மேலான திசை யானைகள் எட்டும்; தம்பித்து தளர—அசைவற்றுத் தளர்ந்து நிற்கவும்; கடல்—எல்லாக் கடல்களும்; சலியா வெம்பித் திரிதர – கொந்தளித்து வெப்பங்கொண்டு நிலை பெயரவும்; வானவர்–தேவர்கள், வெருவுற்று இரிதர—அஞ்சி ஓடவும்; ஓர் செப்பொன் சிலை தெறியா ஒப்பற்ற பொன் மயமான தன்