பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

—சக்கரதாரியான திருமால்; நெறியின் கொண்டான்—முறையாகத் தனக்கு எடுத்துக் கொண்டான்; என்ற இது உணர்ந்த விண்ணோர் – இதனை அறிந்த தேவர்கள்; இரண்டினும்—இந்த விற்கள் இரண்டினுள்ளும்; வன்மை எய்தும் வென்றியது யாது—வலிமையால் அடையத் தகும் – வெற்றியுடையது எது என்று; விரிஞ்சனை வினவ – பிரம தேவனைக் கேட்க அந்நாள் – அந்த நாளில்.

𝑥𝑥𝑥𝑥


ன்றனன் என்ன நின்ற
        இராமனும் முறுவல் எய்தி
நன்று ஒளிர் முகத்தன் ஆகி
        ‘நாரணன் வலியினாண்ட
வொன்றி வில் தருக’ என்னக்
        கொடுத்தனன் வீரன் கொண்டார்
துன்று இரும் சடையோன் அஞ்ச
        தோளுற வாங்கிச் சொல்லும்

𝑥𝑥𝑥𝑥

இவ்வாறு பரசுராமன் கூறலும், அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமனும், ‘அந்த வில்லைத் தருக’ என்று கூறினான். பரசுராமனும் கொடுத்தான். வாங்கினான் ரகு வீரன். தோள்வரை இழுத்து நானேற்றிக் கூறினான்;

𝑥𝑥𝑥𝑥

என்றனன்—என்று பரசுராமன் கூறி முடித்தான்; என்ன—அவன் அவ்வாறு கூறி முடிக்கும் வரை; நின்ற இராமனும்—அவன் கூற்று முழுதும் கேட்டு நின்ற இராமனும்; முறுவல் எய்தி—புன்முறுவல் பூத்து; நன்று ஒளிர் முகத்தன் ஆகி—நன்றாக ஒளி வீசும் முகம் உடையவனாகி; (பரசுராமனை நோக்கி) நாரணன்