பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169

—திருமால்; வலியின் ஆண்ட—வலிமையோடு கையாண்ட, வெற்றிவில்—வெற்றிக்குரிய அந்த வில்லை; தருக—இங்கே தருவீராக; என்ன – என்று சொல்ல; கொடுத்தனன் – பரசுராமன் அதைக் கொடுத்தான்; வீரன்—ரகு வீரனாகிய இராமன்; கொண்டான்—அதனை எளிதில் வாங்கிக்கொண்டு; துன்று இரும் சடையோன்—அடர்ந்த சடை கொண்ட அப்பரசுராமன்; அஞ்ச – அஞ்சும் வண்ணம்; தோளுற வாங்கி—தோள்வரை இழுத்து நாண் ஏற்றி.

𝑥𝑥𝑥𝑥


பூதலத்து அரசை எல்லாம்
        பொன்று வித்தனை என்றாலும்
வேத வித்தாய மேலோன்
        மைந்தன் நீ; விரதம் பூண்டாய்
ஆதலிற் கொல்லல் ஆகாது
        அம்பு இது பிழைப்பது அன்றால்
யாது இதற்கு இலக்கமாவது?
        இயம்புதி விரைவில் என்றான்

பரசுராமனிடமிருந்து வாங்கிய வில்லை எளிதில் வளைத்து நாணேற்றிய இராமன் சொல்கிறான்;

“பூமியில் உள்ள க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்த அரசர்கள் எல்லாரையும் நீ கொன்று குவித்தாய்; க்ஷத்திரிய குலத்தில் பிறந்த நான் உன்னைக் கொல்வதும் தக்கதே. ஆயினும் நான் அவ்விதம் செய்ய விரும்பினேன் அல்லன். காரணம், வேதங்களை ஓதி உணர்ந்த மேலோனாகிய ஜமதக்னி முனிவரின் மைந்தன் நீ; நீயும் தவ ஒழுக்கம் மேற்கொண்டுள்ளாய். எனினும் எனது பாணம் தவறுதலாகாது. இதற்கு ஓர் இலக்கினை அறிவி; சீக்கிரம்” என்றான்.

𝑥𝑥𝑥𝑥

22