பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

எண்ணிய பொருள் எலாம் – நீ கருதிய யாவும்; இனிது முற்றுக—கருதியவாறே இனிது நடைபெறுக; விடை—நான் விடை பெறுகிறேன்: என – என்று கூறி; தொழுது – இராமனை வணங்கி போனான் – (பரசுராமன் விடைபெற்று சென்றான்)

𝑥𝑥𝑥𝑥


ரிவு அறு சிங்தை அப்
        பரசு ராமன் கை
வரிசிலை வாங்கி ஓர்
        வசையை நல்கிய
ஒருவனைத் தழுவி நின்று
        உச்சி மோந்து தன்
அருவியங் கண்ணெனும்
        கலச மாட்டினான்.

பரசுராமன் போன உடனே இராமனைக் கட்டித் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான் தசரதன்.

𝑥𝑥𝑥𝑥

பரிவு அறு சிந்தை – இரக்கமற்ற மனம் கொண்ட; அ பரசுராமன் கை – அந்தப் பரசுராமன் கையிலிருந்த; வரிசிலை வாங்கி – கட்டமைந்த வில்லை வாங்கிக் கொண்டு ; ஓர் வசையை நல்கிய—ஓர் பெரும் பழியினை அவனுக்கு அளித்த; ஒருவனை – ஒப்பற்ற இராமனை தழுவி நின்று – மகிழ்ச்சியோடு தழுவிக் கொண்டு; உச்சி மோந்து உச்சி முகந்து; தன் – தன்னுடைய; அருவி கண் எனும் கலசம்—அருவி போல இன்பக் கண்ணீர் பெருகும் கண்களாகிய கலசங்களால்: ஆட்டினான் – நீராட்டினான் (தசரதன்)

𝑥𝑥𝑥𝑥