பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24



இரவி தன்குலத்து எண்ணில் பார்வேந்தர்தம்
பரவும் நல் ஒழுக்கின்படி பூண்டது
சரயு என்பது; தாய்முலை அன்னது; இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.

கோசல நாட்டின் செழிப்புக்குக் காரணம் நீர்வளம். அந்த நீர் வளத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது சரயு என்ற ஆறு.

இவ்வாறு அந்த நாட்டிலே நல்ல ஆறு பாய்ந்து நீர் வளமும் நில வளமும் செழித்தன என்றால் அதற்குக் காரணம் யார்? சங்கிலித் தொடர் போலே தொடர்ந்து ஆட்சி செலுத்தி வந்த அரசர்கள்; அவர்கள் சூரிய குலத்தில் தோன்றியவர்கள்.

இவ்வாறு ஆற்றுப் படலத்திலே முன்னுரை கூறுகிறான் கம்பன். அந்த வழியிலே வந்த தசரதன் எப்படி இருந்தான்? அவனுடைய ஆட்சி எப்படி இருந்தது என்பதைப் பின் ஒரு கவியிலே கூறுகிறான்.

தாய் போல் இருந்தான் தசரதன். எதிலே? அன்பிலே, குடி மக்களிடம் அன்பு செலுத்துவதிலே. ஒரு தாய் எப்படித் தன் மக்களிடத்திலே அன்புடன் இருப்பாளோ அதே போலத் தன் குடி மக்களிடம் அன்பு வைத்திருந்தான்.

அன்பு கொண்டிருந்தால் மட்டும் போதுமா? நன்மை செய்ய வேண்டாமா? செய்தான். எது போல? தவம் போல. நல்ல தவம் செய்தால் அது எப்படி நன்மை பல தருமோ அதே போல தசரத மன்னனும் தன் குடிகளுக்கு நன்மைகள் பல செய்தான்.

அன்பு செலுத்த வேண்டியது தான்; நன்மைகளும் செய்ய வேண்டியனவே. குற்றம் செய்கிறவர்களைத் தண்டிக்க