பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தந்தி வாத்தியங்கள் முதலியவைகளோடு தழுவிய பாட்டுக் கச்சேரிகள் ஆங்காங்கே நடைபெற்றன. அவற்றைக் கேட்டு மக்கள் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

...........................................
     .......... ............ ............
பருந்தொடு கிழல் சென்றன்ன
        இயல் இசைப் பயன் துய்ப்பாரும்

மற்றும் சில இடங்களிலே நல்ல சொற்பொழிவுகள் நிகழ்ந்து கொண்டு இருந்தனவாம். எத்தகைய சொற் பொழிவு?

தேவாமிர்தம் போன்ற இனிய சொற்பொழிவுகள். ஆராய்ச்சியும் நல்ல பயிற்சியும் உள்ளவர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகள். அவற்றைக் கேட்டு மக்கள் மகிழ்வார்களாம்.

மருந்தினும் இனிய கேள்வி
        செவி உற மாந்துவாரும்
 ......................................

அவர்களது கலைவாழ்வு இப்படி இருந்தது என்று சொல்கிறார் கவி. இப்படிப் பல ஆராய்ச்சிகளும் சொற்பொழிவுகளும் கேட்டு அறிவு வளம் பெறுவதாலே அந்த நாட்டிலே அறியாமை என்பதே இல்லையாம்.

வெண்மை இல்லை ; பல்
        கேள்வி மேவலால்

இவ்வளவு சொல்லி விட்டு அந்த நாட்டின் பொதுவான நிலவரம் பற்றியும் சொல்கிறார். எப்படி? மக்கள் மிகுந்த