பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

இல்லை அந்த நகரிலே. அதனாலே எவரும் தங்கள் வீடுகளுக்குப் பூட்டுப் போடுவது இல்லை. எதையும் பூட்டி வைத்துப் பாதுகாப்பது இல்லை. கொடுப்பார் எவரும் இலர், ஏன் ? ‘கொடு’ என்று கேட்பார் எவருமே இலர். அதனாலே கொடுப்பவர் இலர். இரப்பவரும் இலர், ஈவாரும் இலர்.

தெள்வார் மழையும்—தெளிவான நீர் பொழிகின்ற மேகமும் ; திரை ஆழியும் அலை கடலும் ; உட்க—வெட்கம் அடையும் படியாக; நாளும்—நாள்தோறும்; வள் வார் முரசம்—தோல் கயிறுகள் கொண்டு கட்டப்பட்ட பெரிய பேரிகைகள் அதிர்—ஒலிக்கின்ற மாநகர் அப்பெரிய நகரில்; வாழ்—வாழ்கின்ற; மக்கள்— மக்களில்; கள்வார் இலாமையால்—திருடர் இல்லாமையால்; பொருள் காவலும் இல்லை—எவரும் தங்கள் பொருள்களைப் பூட்டி வைத்துப் பாதுகாப்பது இல்லை; கொள்வார் இலாமை ஈ என்று யாசிப்பவர் எவரும் இல்லாமையால் கொடுப்பாரும் இல்லை.

ல்லாது நிற்பர் பிறர்
      இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை ; அவை
      வல்லர் அல்லாரும் இல்லை ;
எல்லாரும் எல்லாப் பெரும்
      செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை ; உடையாரும்
      இல்லை மாதோ !