பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தயிர். கட்டியாகப் பெய்து கலக்கப்பட்ட தயிர் சாதம். இவற்றுடன் பழங்கள். மா, பலா, வாழை முதலிய முக்கனிகளையும் சேர்த்து உண்டனர்.

இத்தகைய சாப்பாட்டு ஆரவாரம் வீடுதோறும் கேட்கும்.

𝑥𝑥𝑥𝑥

எங்கும்—எங்கு பார்த்தாலும்; உண்டி அயில்வுறும் அமலைத்து—விருந்துச் சோருண்ணும் ஆரவாரம். தம் தம் இல் இருந்து—அவரவர் தம் வீடுகளிலே அமர்ந்து; தமரோடும்—அவரவர் தம் சுற்றத்தவரோடும்; தாமும்—தாங்களும்; விருந்தோடும்—விருந்தனருடனும்; முந்து முக்கனியின்—பழங்களில் தலை சிறந்த மா, பலா, வாழை முதலிய மூவகைக் கனிகளோடும்; நானா முதிரையின்—பல்வகைப் பருப்புக்களும்; கண்டம்—வெல்லக் கட்டியும்; முழுத்த நெய்யின்—இவை மூழ்கும் அளவு பெய்யப்பட்ட நெய்யும்; இடை செறிந்த சோற்றில்—சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கல்; செந்தயிர் கண்டம்—சிவந்த தயிர் கட்டிகள்; இடை இடை செறிந்த சோற்றில்—சோறுடன் கலந்த சாதம் (இவற்றை உண்டார்கள்).

𝑥𝑥𝑥𝑥

பிறை முகத் தலைப் பெட்பின்
      இரும்பு போழ்
குறை கறித் திரள் குப்பை
      பருப்பொடு
நிறை வெண் முத்தின் நிறத்து.
      அரிசிக் குவை
உறைவ கோட்ட மில்
      ஊட்டிடம் தோறெலாம்.