பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67



அன்ன சத்திரம் ஒன்றை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் கம்பர். இந்தச் சோற்று மாடம் எக்காட்சி வழங்குகிறது? அரிவாள் மணையிலே நறுக்கப்பட்ட காய் கனிகளின் குவியல் ஒரு புறம். பருப்புக் குவியல் இன்னொரு புறம். வெண்முத்துப் போன்ற அன்னக் குவியல் மற்றொரு புறம். இம்மாதிரியாக சோற்று மாடங்கள் பல.

𝑥𝑥𝑥𝑥

கோட்டம் இல்—எவ்வித குற்றமும் இல்லாமல் நன்கு நடைபெறும்; ஊட்டு இடம் தோறும் – அன்ன சத்திரங்களில் எல்லாம். பிறை முகத்தலை இரும்பு—பிறை போன்ற வடிவுடையதும் இரும்பினால் செய்யப்பட்டதுமாகிய அரிவாள் மணை கொண்டு; பெட்பின்— விருப்பத்தோடு; போழ் குறை—பிளந்து நறுக்கிய; கறித்திரள்—காய்கறிக் குவியல்; குப்பை—குவியலாகக் கிடக்கும்; பருப்போடு – பருப்புடனே; நிறை வெண் முத்தின்—நிறைந்த வெண் முத்துப் போன்ற; அரிசிக் குவை—அன்னக் குவியல்களும்; உறைவ—கிடப்பன.

𝑥𝑥𝑥𝑥

லம் சுரக்கும் நிதியம்
       கணக்கிலா
நிலம் சுரக்கும் நிறை வளம்
       நல் மணி
பிலம் சுரக்கும் ; பெறுவதற்கு
       அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம்
       குடிக்கு எலாம்


அந்த நாட்டு மக்களுக்கு வேண்டிய செல்வத்தை கொண்டு வந்து கொட்டிய வண்ணம் இருக்கும் கப்பல்கள்.