பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79



முனி—அந்த விசுவாமித்திர முனிவர்; வந்து எய்தலும்—தனது சபாமண்டப வாயிலை வந்து அடைந்த உடனே; அந்தரதலத்து இரவி விண்ணிலே இருக்கின்ற கதிரவன்; அஞ்ச—அஞ்சி ஓடும் வகையில்; மார்பில் அணி ஆரம்—தனது மார்பிலே அணியப் பெற்ற மணி மாலைகள்; ஒளி விஞ்ச—மிக்க ஒளி வீச; கந்த மலரில்—தாமரை மலரில் வீற்றிருக்கின்ற; கடவுள் தன்—பிரம தேவனின் வரவு காணும்—வரக் கண்ட இந்திரன் என–தேவேந்திரன் என்று சொல்லும் வகையில்; கடிது எழுந்து அடி பணிந்தான்—விரைவில் எழுந்து சென்று—அவர் தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

𝑥𝑥𝑥𝑥

ன் அனைய முனிவர்களும்
        இமைய வரும்
        இடையூறு ஒன்று உடையரானால்
பன்னகமும் நகு வெள்ளிப்
        பனி வரையும்
        பாற் கடலும் பதும பீடத்
தன் நகரும் கற்பக நாட்டு
        அணி நகரும் மணி மாட
        அயோத்தி என்னும்
பொன்னகரும் அல்லாது
        புகல் உண்டோ ?
        இகல் கடந்த புலவு வேலோய்

விசுவாமித்திர முனிவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய தசரதன், அம் முனிவரை அழைத்து வந்தான்; ஆசனத்தில் இருக்கச் செய்தான். முனிவருக்கு ஏற்ற