பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

மாளிகைகள் உடைய; அயோத்தி எனும் செல்வமிக்க இந்த நகரமும்: அல்லாது—அன்றி; புகல் உண்டோ—அடைக்கலம் புகுதற்கு வேறு இடமுண்டோ? (இல்லை என்ற படி)

𝑥𝑥𝑥𝑥

ன் தளிர்க் கற்பக நறுந்
        தேனிடை துளிக்கு
        நிழல் இருக்கை இழந்து போந்து
நின்று அளிக்கும் தனிக் குடையின்
        நிழல் ஒதுங்கிக்
        குறை இரந்து நிற்ப நோக்கி
குன்று அளிக்கும் குலமணித் தோள்
        சம்பரனைக்
        குலத் தோடும் தொலைத்து நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ
        புரந்தரன் இன்று ஆள்கின்ற
        அரசு என்றான்

அமராவதியிலே, கற்பக தருவின் நிழலிலே இனிய நறுமணம் வீசும் தேன் துளிக்க அரசு வீற்றிருந்தான் இந்திரன்.

அவனை வெற்றி கொண்டு அந்த அரசைக் கைப்பற்றிக் கொண்டு விரட்டி விட்டான் சம்பராசுரன்.

தேவந்திரன் உன்னிடம் வந்தான்; உனது வெண் கொற்றக்குடை நிழலில் ஒதுங்கி நின்றான்; உன்னிடம் தனது நிலை கூறினான்;

11