பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

இந்த மான் பின்னே செல்வது சரியன்று என்று சொன்ன தம்பி மிக்க கெட்டிக்காரன். நான் உய்யும் பொருட்டு என் பின்னே காடு போந்தவன் என்று பெருமையோடு எண்ணினான்.

வெய்யவன் – கொடியவனான அந்த மாரீசன்; தன் உரு ஒடு – தன் சுய உருவத்துடனே; வீழ்தலும் – கீழே விழுந்தவுடன்; (இராமன்) செய்யது அன்று – இந்த மான் பின்னே செல்வது சரியன்று (வஞ்சக மான்) என – என்று; செப்பிய – சொன்ன; தம்பியை – தம்பியாகிய வட்சுமணனை; ஐயன் வல்லன் – என்னப்பன் கெட்டிக்காரன்; என் ஆருயிர் வல்லன் – எனது அரிய உயிர் போன்றவன்; வலியன் (சமர்த்தன்) நான் உய்ய வந்தவன் – காட்டிலே எனக்கு ஏற்படவிருக்கும் இன்னல்களினின்றும் நான் பிழைத்து வாழ என்னுடன் காடு போந்தவன்; என்று உன்னினான் – என்று பெருமையோடு எண்ணினான்.

எயிறு அலைத்து
        முழை திறந்து ஏங்கிய
செயிர் தலைக் கொண்ட
        சொல் செவி சேர்தலும்
குயில் தலத்திடை உற்றது
        ஓர் கொள்கையாள்
வயிறு அலைத்து
        விழுந்து மயங்கினாள்.

மாரீசனின் கூக்குரல் கேட்டவுடனே சிதை என்ன செய்தாள்? தன் இரு கைகளாலும் வயிற்றிலே அடித்துக் கொண்டு மரத்தின் மீதிருந்த குயில் தரையிலே விழுந்தது போல துயருற்றுத் தரையிலே விழுந்து மயங்கினாள்.