பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



122

அதனின் – அதனைவிட; வஞ்சம் – நான் இப்பொழுது மேற்கொண்டுள்ள வஞ்சகச் செயலே; சால – மிகவும்; பயன் தரும் – நல்ல பயன் தரும் என்றான்.

என்னும் அவ் வேளையின் கண்,
         “எங்கு அடா போவது? எங்கே?
நில்! நில்” என்று இடித்த சொல்லன்
         நெருப்பிடைப் பரப்பும் கண்ணன்
மின் என விளங்கும் வீரத்
         துண்டத் தன் மேரு எனும்
பொன் நெடுங்குன்றம் வானின்
         வருவதே போலும் மெய்யான்.

இப்படி இராவணன் கூறிக்கொண்டிருக்கிறபோது, “எங்கேயடா! போகிறாய்? நில், நில்” என்று இடி முழக்கம் போல கூவிக்கொண்டு, கண்களிலே நெருப்பைக் கக்கும் கோபத்துடனே. மின்னல்போல ஒளி வீசி வீரச் செயல் புரியும் மூக்குடையவனும் மேரு என்னும் பொன் மலையே பறந்து வருவது போன்ற உடல் உடையவனும் (ஆகிய சடாயு வந்தான்.)

என்னும் அவ் வேலையின் கண் – என்று கூறிய அந்த சமயத்திலே; எங்கு அடா போவது எங்கே – அடா! எங்கே போகிறாய்? எங்கே? நில் நில் – அப்படியே நில், நில்; என – என்று? இடித்த சொல்லின் – இடி முழக்கம்போலே உரக்கக் கூவிய சொற்களுடன்; நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – சினத்தால் தீப்பொறி பரப்பும் கண்களை உடையவனும்; மின் என விளங்கும் – மின்னல்போல ஒளி வீசும்; வீர துண்டத்தன் – வீரச் செயல் புரியும் மூக்குடையவனும்; மேரு எனும் பொன் நெடுங் குன்றம் – பொன் மலையான மேரு