பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

வந்தனன் எருவையின்
       மன்னன்; மான்பு இலான்
எந்திரத் தேர் செலவு
       ஒழிக்கும் ஈட்டினால்
சிந்துரக் கால் சிரம்
       செக்கர் மூடிய
கந்தரம் கயிலையை
       நிகர்க்கும் காட்சியான்.

இராவணனுடைய விசைத்தேர் செல்லும் வேகத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியிலே கால், தலை இரண்டும் சிவந்தன. செவ்வானம் கவிந்தது போன்றிருந்தது. கழுத்து கயிலாய கிரிபோல் காட்சியளித்துக்கொண்டு கழுகரசன் சடாயு வந்தான்.

மாண்பு இலான் – நற்குண நற்செயல் இல்லாத இராவணனின்; எந்திரத் தேர் – சக்தி மிகு தேரின்; செலவுபோக்கை; ஒழிக்கும் – தடுத்து நிறுத்தும்; ஈட்டினால் – முயற்சியால்; சிந்துரம் கால் சிரம் – சிவந்த கால்களும், சிரமும் செக்கர் மூடிய – செவ்வானம் கவிந்தது போன்ற; கந்தரம் – கழுத்தும்; கயிலையை – கைலாச மலையை; நிகர்க்கும் – ஒப்பாக விளங்கும்; காட்சியான் – தோற்றம் கொண்டவனுமாகிய; எருவையின் மன்னன் – கழுகுகளின் அரசனாகிய சடாயு; வந்தனன் – அந்த இராவணன் எதிரே வந்தான்.

சீதாபிராட்டியின் புலம்பல் கேட்டு வெகு வேகமாகப் பறந்து வந்தான் சடாயு. என்ன நடத்தது என்பதறியான். அணங்கினை நோக்கினான். “அஞ்சேல்” என்று துணிவு