பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133


பன்னசாலைக்கு விரைந்து ஓடி வந்தான் இராமன். சீதையைக் கண்டிலன். உடலை விட்டுச் சென்ற ஓர் உயிர் மீண்டும் அவ்வுடலில் புகுவான் வேண்டித் தேடி வந்து அவ்வுடலைக் காணாதது போல் திகைத்து நின்றான்.

ஓடி வந்தனன் – விரைந்து ஓடி வந்து இராமன்; சாலையின் – அப் பன்ன சாலையினிடத்து; சோலையின் உதவும் – சோலையிலே மலர்ந்த; தோடு இவர்ந்த – இதழ்கள் ஓங்கி விளங்கிய; பூம் – பூக்களை அணிந்த; சுரி குழலாள் தனை – சுருண்ட கூந்தலை உடைய சீதா பிராட்டியை; காணான் – காணாதவனாய்; ஆர் உயிர் – அரிய உயிர்; தன்னுடையது – தன்னுடையதான; கூடு பிரிந்து – உடலை விட்டுப் பிரிந்து சென்று; குறியா தேடி வந்து – மீண்டும் அவ்வுடலில் புகும் நோக்குடன் திரும்பி வந்து; அது கண்டிலது ஆம் என – அவ்வுடலைக் காணாதது போல; நின்றான் – திகைத்து நின்றான்.

கைத்த சிந்தையன் கனங்குழை
       அணங்கினைக் காணாது
உய்த்து வாழ்தர வேறு ஒரு
       பொருள் இலான், உதவ
வைத்த மாநதி மண்ணோடு
       மறைந்தன, வாங்கிப்
பொய்த்துளோர் கொளத்திகைத்து
       நின்றானையும் போன்றான்.

ஆபத்துக் காலத்தில் வாழ்வதற்கு உதவியாயிருத்தல் பொருட்டு தனது பெரும் செல்வம் முழுவதையும் துளி கூட வைத்துக்கொள்ளாமல், மண்ணிலே புதைத்து வைத்தான் ஒருவன். வஞ்சகரான கள்வர் அப்பெரு நிதியை மண்ணொடு