பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

வெகு தூரம் போகு முன் நாமும் பின் தொடர்வோம்” என்று இராமனைத் தொழுது கூறினான் லட்சுமணன்.

இளையவனாகிய – தம்பியாகிய லட்சுமணன்; தேரின் ஆழியும் – தேர்ச் சக்கரத்தின் சுவடும்; தெரிந்தனம் – கண்டோம்; தீண்டுதல் அஞ்சி – சீதாபிராட்டியின் திருமேனி தீண்டுதற்குப் பயந்து; பாரீனோடு – அவள் இருந்த நிலத்தோடு; கொண்டு – பெயர்த்து எடுத்துக்கொண்டு; அகன்றதும் – சென்றதும்; பார்த்தனம் – பார்த்துவிட்டோம்; உரன் இலாதவர் போல் – வலிமையற்றவர் போல; பயன் இன்று – ஒரு விதப் பிரயோசனமும் இல்லாமல்; ஓரும் தன்மை ஈது – நாம் ஆலோசிக்கும் இத் தன்மையை; என் என்பது – என் என்று சொல்வது; தூரம் போதல் முன் – பிராட்டியை எடுத்துச் சென்றவன் வெகு தூரம் போவதன் முன்; தொடர்தும்– அவனைப் பின் தொடர்ந்து செல்வோம்; என்று இளையவன் தொழலும் – என்று இளையவனாகிய லட்சுமணன் தொழுது கூறவும்.

“ஆம்; அதுவே சரி” என்று கூறி இளையவன் கூறிய யோசனைக்கு இணங்கினான் இராமன். நீண்ட அம்புப் புட்டில் முதலியவற்றை முறைப்படி அணிந்து கொண்டனர் இருவரும். தேர் சென்ற சுவடு பின்பற்றிச் சென்றனர். அவ்வாறு சிறிது தூரம் சென்றனர். தேர்ச் சுவடு மறைந்தது. வெந்த புண்ணில் வேல் ஊடுருவிச் சென்றது போல் மனம் புழுங்கினான் இராமன்.

“இனி என்ன செய்வோம் தம்பி?” என்று பிரலாபித்தான் இராமன்.

“ஏங்கிச் செயலற்று நிற்பதால் யாது பயன்? அந்தத் தேர் வான் வழியே தெற்கு நோக்கிச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. அது சென்றிருக்கும் தூரமோ உமது கணை