பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

விளையாட– பொழுது போக்கி விளையாடுவதற்கு; கான்‌ உள– காடுகள்‌ உள்ளன; புனல்‌ ஆட– நீராடுவதற்கு; கங்கையும்‌ உள– கங்கா நதியும்‌ இருக்கிறது; நான்‌ உளதனையும்‌– என்‌ மூச்சுள்ள வரைக்கும்‌ நீ இனிது இரு– நீ எங்களிடத்தில்‌ சுகமாக இருப்பாயாக; எம்‌ பால்‌– எங்கள்‌ இடத்துக்கு; நட– எழுந்தருள்வாயாக.

அத்திசை உற்று ஐயன்‌
        அன்பனை முகம்‌ நோக்கி
“சித்திர கூடத்தில்‌ செல்‌
        நெறி பகர்‌” என்னப்‌
பத்தியின்‌ உயிர்‌ ஈயும்‌
        பரிவினன்‌ அடி தாழா
“உத்தம அடி நாயேன்‌
        ஓதுவது உளது” என்றான்‌.

கங்கையைக்‌ கடந்து கரை சேர்ந்தார்கள்‌. சேர்ந்த பிறகு சித்திரகூடம்‌ செல்கிற வழியைச்‌ சொல்‌ என்று கேட்கிறான்‌ இராமன்‌. யாரைப்‌ பார்த்து? குகனைப்‌ பார்த்து.

இராமனிடத்தில்‌ ஆழ்ந்த பக்தி கொண்டவனும்‌ அந்த பக்தியினாலே தன்‌ உயிரையும்‌ கொடுக்கக்கூடியவனாகிய குகன்‌, பின்‌ என்ன செய்தான்‌?

இராமனை அடிபணிந்து நாயேன்‌ சொல்லிக்‌ கொள்ள எண்ணியிருக்கும்‌ விண்ணப்பம்‌ ஒன்று உள்ளது என்கிறான்‌.

ஐயன்‌– இராமன்‌; அத்திசை உற்று– கங்கையின்‌ அக்கரை அடைந்து; அன்பனை முகம்‌ நோக்கி– தன்‌ பால்‌