பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


அம்பலம் - பலர் வந்து கூடும் இடங்களும்; தேவர் ஆலயங்கள் - தேவாலயங்களும்; பாடல் வேதிகை - சங்கீத மேடைகளிலும்; பட்டி மண்டபம் - பட்டி மண்டபங்களிலும், முதல் - முதலிய பலவும் - பல இடங்களிலும்; நாடி - சீதையைத் தேடி; ஏகினான் - சென்றான்; இராகவன் புகழ் எனும் நலத்தான் - இராமனது புகழ் ஓர் உருக் கொண்டு வந்ததோ என்று சொல்லத் தக்க சிறப்புடைய அநுமன்.


***

மணிகொள் வாயிலில் சாளரத்
        தலங்களில் மலரில்
கணிகொள் நாளத்தில் கால் எனப்
        புகை எனக் கலக்கும்,
நுணுகும்; வீங்கும்; மற்று அவன்நிலை
        யாவரே நுவல் வார்?
அணுவில் மேருவின் ஆழியான்
        எனச் செலும் அறிவோன்.

மாளிகை வாயில்களிலும் சாளரங்களிலும் தாவித் தேடினான். மலரிலும், மலரின் தண்டுகளிலும் ஊடுருவிச் சென்று பார்த்தான். காற்றுப் போலவும், புகை போலவும் எங்கும் நுழைந்தான். சில இடங்களில் பேருருவம் கொள்வான். மற்றும் சில இடங்களில் சிறிய உருவம் எடுப்பான். அவன் செய்த சித்து விளையாட்டெல்லாம் எவரே சொல்ல வல்லார்?


***

அநுமன்,

மணி கொள் வாயிலில் - அழகு கொண்ட அந்நகர் மாளிகைகளின் வாயில்கள் உள்ளும்; சாளரத்தலங்களில் - சாளரங்களிலும்; மலரில் - மலர்களிலும்; கணிகொள்